பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

359

ஆடை அணிகள்

முதுகு மறையவிடும் பின் தாலி முதலியவை. கோமேதகமும்,வைரமும், மாற்றி மாற்றிக் கட்டப்பட்டக் காதணிகள். தெய்வ வுத்தி, வலம்புரிச் சங்கு, பூப்பாளை, தென்பல்லி, வட பல்லி என்னும் இவை தலை முழுதும் அணி செய்கின்ற தலைக்கோல அணிகள்.

தமிழ்ச் சிற்பக் காலம்: மேலே குறித்த சங்க, அமராவதிக் காலத்திற்குப்பிறகு முந்நூறு ஆண்டுகளின் (கி.பி. 400 முதல் 700 வரை) நிலை நன்கு தெரியவில்லை. அக்கால அணிகளை அறிய பாதாமி போன்ற இடங்களிலுள்ள சாளுக்கியர் சிற்பங்கள் மிக உதவுகின்றன. அச்சிற்பங்களின் மேல் காணப்படும் அணிகள், முன் பல்லவ கால அணிகளையே ஒத்திருக்கின்றன. தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கி.பி.700-ல் இருந்துதான் கிடைக்கின்றன. ஏறக்குறைய, கி. பி. 1,600-ல் விஜயநகர சாம்ராச்சியம் அழிந்து, முகம்மதியர், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்பட்டது. ஆகையால், கி.பி. 1600க்கு அப்புறம் ஏற்பட்ட சிற்பங்களை விலக்கிக் கி. பி. 700 முதல் 1600 வரையுள்ள சிற்பங்களைத் தமிழ்ச்சிற்பங்களாகக் கொள்ள லாம். அவைகளின்மேல் காணப்படும் அணிகள் அக்காலத் தமிழ் மக்களின் முக்கிய அணிகளாகும். பல்லவ காலத்திலிருந்து விஜயநகர காலம்வரை காணப்படும் அணிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பினும், காலத்தை ஒட்டிச் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. (படம் 3). கிரீடங்களைப் பிரதிமைகளன்றி மக்கள் யாவரும் அணிந்தன ரெனலாகாது. கிரீட வகைகள் தனியாகப் படம் 2-ல் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவகைக் கிரீடத்தைப் பார்த்தவுடனே அது எந்தக் காலத்தியது எனச் சொல்லும்படி ஒரு தனி அமைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே, மற்றைய அணிகளும் அமைந்துள்ளன. உதாரணமாகப் பல்லவ காலத்தில் பூணூல் ஒரே பட்டையாகவும், கைமேல் விழும்படி யாகவும், சோழர்காலத்தில் மூன்று நூல்கள் போல் உடம்போடு ஒட்டிய மாதிரியும்,விஜயநகரக் காலத்தில் ஆறு, ஒன்பது, நூல்கள் போலப் பெரிய தாகவும் அமைந்துள்ளன. ஆகையால் அணிகளைக் கொண்டு சிற்பங்களின்காலத்தை மதிப்பிட முடியும். விஜய நகரக் கடைசிக் காலத்தில் சிற்பங்களில் தெரிந்த அணிகளைப் பற்றிக் கீழே விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

படம் 2.
பல்லவ(1, 4, 5, 8), சோழ(2, 3, 6, 9),
விஜயநகர் (7), ஹொய்சாள (10)
கிரீடங்கள்

1. தலை அணிகள்: படம் 4-ல் பெண்களுக்குரிய முக்கியமான தலையணிகள் காட்டப்பட்டுள்ளன.

அணிகளைக் காட்டும் சிற்பங்கள்
உதவி : வை, மு.நரசிம்மன்

2. காது அணிகள் : படம் 5-ல் சில முக்கியமான குண்டலங்கள் வரைந்து காட்டப்பட்டுள்ளன.