பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

684

இந்தியா

உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும்.

மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது.

மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும்.

மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை :

செலவினம்

கோடி ரூபாய்
1954-54 வரவுசெலவுத்
திட்டப்படி

1. ராணுவம் 199.84
2. அதிகார வர்க்கம் 71.27
3. கடனுக்கு வட்டி 37.17
4. வசூலிக்கும் செலவுகள்
முதலியன
32.49

இவை மொத்தம் ரூ. 340.77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன.

இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு :

ஏ இராச்சியங்கள் பீ இராச்சியங்கள்
இராச்சியம் கோடி
ரூபாய்
இராச்சியம் கோடி
ரூபாய்
அஸ்ஸாம் 6.85 ஐதராபாத் 22.58
பீகார் 22.44 மத்திய பாரதம் 9.40
பம்பாய் 49.20 மைசூர் 5.54
மத்தியப்பிரதேசம் 16.57 பெப்சு 4.48
சென்னை 49.19 ராஜஸ்தான் 14.15
ஒரிஸ்ஸா 7.90 சௌராஷ்டிரம் 4.17
உத்தரப்பிரதேசம் 50.87 திருவிதாங்கூர்
கொச்சி
5.11
மே. வங்காளம் 30.29


233.31 68.43


ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும்.

விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி.

நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும்.

விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி