பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதிகாரப் பத்திரம் காணக்கூடாததுமான ஒரு பறவையைத் தேடி அலை கின்றன. அப்பறவை முழுமுதல் கடவுளேயாகும். அத்தார் ஒரு பெரிய கவி அல்ல. அவருடைய பாடல்களில் ஓதப்படுகின்ற ஒழுக்கம், உட்பொருள் ஆய்வு இவையே அவருக்குச் சிறப்பை அளிக்கின்றன. கபீர்தாசைப் போலவே அவரும் அறிவைத்தான் தூண்டுகிறார்; இதயத்தைத் தொடுவதில்லை. அக் தாரின் முடிவு வருந்தத்தக்கது. இன்னார் என்று அறிந்துகொள்ளாமல் ஒருவன் அவரைக் கொன்றுவிட் டான். உண்மையை அறிந்த பிறகு அவன் வருந்தி, அவருடைய சமாதிக்குக் காவலாளியாகத் தொண்டு செய்யலானான். ஹை. அதிகாரப் பத்திரம் (Power of Attorney) ; ஒருவர் தம் சார்பில், அல்லது தம் பெயரில் வேறு ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் நட வடிக்கைகள் எடுப்பதற்கு அவருக்கு அல்லது அவர் களுக்கு உரிமை வழங்கி எழுதிக் கொடுக்கும் ஒரு பத்திரம். குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு மட்டிலும் அதிகாரம் வழங்கும் பத்திரத்துக்குச் 'சிறப்பு அதிகாரப் பத்திரம்' (Special P.) என்று பெயர். பொது வாகச் சில நடவடிக்கைகள் எடுக்க எழுதித்தரப்படும் பத்திரத்துக்குப் 'பொது அதிகாரப் பத்திரம்' என்று பெயர். அதிகாரம் வழங்குபவர் 'முதல்வர்’ (Principal); அதிகாரம் பெறுபவர் 'ஏஜன்டு'. சட்டப் படி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் தகுதியுடையவர் கள் யாரும் தங்களுக்கு ஒரு அதிகார ஏஜன்டை நியமித்துக் கொள்ளலாம். மணமான பெண்களுக்கு மட்டில் இவ்வுரிமை இல்லை. யார் வேண்டுமாயினும் ஆனால் சட்டப்படி ஒப்பந்தம் ஏஜன்டு ஆகலாம். செய்துகொள்ளும் தகுதி அவரிடம் இருக்கவேண்டும். அப்போதுதான் அவர் தம் முதல்வருக்குப் பொறுப் பாளியாவார். ஏஜன்டு நியமனத்துக்கு ஊதியம் தேவையில்லை. தமக்குத் தாமே நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலாத ஒருவர் தமக்கு ஒரு ஏஜன்டை நியமித்துக்கொள்ளுகின்றார். தம் முதல் வரின் ஆணைக்கு ஒப்ப, அல்லது, நடைமுறை வழக்கங் கட்கு ஒப்ப ஒரு ஏஜன்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு மாறுபட்டு அவர் நடந்துகொள் ளுவாராயின், தம் செயலின் விளைவுகட்கெல்லாம் தாமே தம் முதல்வருக்குப் பொறுப்பாளியாவர். ஓர் ஏஜன்டானவர் தம் முதல்வருக்குக் கணக்குவழக்கு களை முறைப்படி ஒப்படைக்கக் கடமைப்பட்டவர். தம் ஏஜன்டு எடுக்கும் நடவடிக்கைகள் சட்டத்துக்குட் பட்டிருக்கும்போது, அவருக்கு ஏதேனும் ஊறு விளையு மாயின் அதற்கு முதல்வர் ஈடுசெய்யக் கடமைப் பட்டவராவர். உத்தரவுபெற்ற ஓர் ஏஜன்டு நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கு அனுசரணையாக நியாயமான வேறு எந்த வினையையும் தாம் மேற்கொள்ளலாம். தம்மைக் கலந்து கொள்ளாமலோ, தம் உத்தர வின்றியோ தம்முடைய ஏஜன்டு எடுத்துக்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளை எல்லாம் முதல்வர் அங்கீ கரிக்கலாம். அப்போது அவை அவருடைய உத்தர வின்படி எடுக்கப்பட்டவையாகவே கொள்ளப்படும். ஏஜன்டு எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம், முதல்வ ரால் எடுக்கப்பட்டவை போலவே, சட்டப்படி செல்லுபடியாகத்தக்கன. தாம் பெற்ற உத்தரவுக்குப் புறம்பாக ஒரு ஏஜன்டு செய்யும் புரளிகளும், மோசடிகளும் அவருடைய முதல்வரைக் கட்டுப் படுத்தா. காலங்குறிக்கப் பெறாத அதிகாரப் பத்தி ரங்கள் கீழ்க்கண்ட காரணங்களினால் முறிவுபெறும்: முதல்வர் தாம் வழங்கிய அதிகாரத்தை மீளவும் வாங்கிக் கொள்ளுதல்; தாம் பெற்ற அதிகாரத்தை 13 அந்தோனிக்குட்டி அண்ணாவியார் ஏஜன்டே விட்டுக் கொடுத்தல்; சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முற்றுப்பெறுதல்; முதல்வரோ, அல்லது, ஏஜன்டோ இறந்து போதல், அல்லது புத்திசுவாதீனத்தை இழத்தல்; முதல்வர் தாம் வாங்கின கடன்களைத் திருப்பி அளிக்க இய லாதவர் (Insolvent) என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு ஆதல். அதிகாரப் பத்திரத்தின்மேல் கட்டண முத்திரை பில்லை ஒட்டப்படவேண்டும். பத்திரத்துக்குச் சாட்சியோ, பதிவோ தேவை இல்லை. ஆனால் ஒரு பத்திரத்தைப் பதிவுக்குச் சமர்ப்பிக்க உத்தரவு வழங்கி எழுதப்படும் அதிகாரப்பத்திரத்துக்குச் சாட்சியும், பதிவும் தேவை. அதிகாரப் பத்திரத்தைப் பற்றிய சட்டம் 1882-ல் இயற்றப்பட்ட அதிகாரப்பத்திர சட்டத்திலும் ஒப்பந் தச் சட்டத்தின் (Gontract Act) பத்தாம் பகுதியிலும் உள்ளது. ஜி.இரா. அந்தாம் பிரயோன்சா (1626-1666) : போர்ச்சுகல் குவார்டா என்ற நகரத்தில் புகழ்மிக்க பெரிய பிரபுக்கள் குடும்பத்தில் தோன்றி, எவோரா தேவதாய் கல்லூரியில் கல்வி பயின்று, 1643 ஆம் என்ற நகரில் உள்ள தம் முன்னோரால் கட்டப்பட்ட ஆண்டில் சேசு சபையில் சேர்ந்து, குரு என்ற பட்டம் பெற்று, 1647-ல் கொச்சிக்கு வந்து, பின்னர் 1.653-ல் மதுரை நகருக்கு வந்தார். இவரது தமிழ்ப் பெயர் மக்களுடன் தமிழராகவே வாழ்ந்தார். பரமானந்தசாமி என்பதாகும். இத்தூயோர் தமிழ் இவர்க்குத் தமிழ் மொழியில் நல்ல பயிற்சி உண்டு. இதன் யொன்றை உருவாக்கினார். அது இவர் காலமான பயனால் இவர் தமிழ் போர்ச்சுகேசிய அகராதி மூன்றாண்டுக்குப் பின்னர் (1669-ல்) அம்பலக்காட்டில் அச்சாகியது. அதன் ஒரே பிரதி வாட்டிக்கன் நூல கத்தில் உள்ளது. மேல்நாட்டினருக்கு இது மிகவும் பயன்பட்டது. இதையன்றி போர்ச்சுகேசிய- தமிழ் அகராதி ஒன்றும் இவரால் எழுதப்பட்டதாகத் தெரி கிறது. இவர் நாற்பதாம் வயதில் (14-12-1666-ல்) காலமானார். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முசிறிக்கு அருகிலுள்ள தொட்டியம் என்ற இடத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட் டிருக்கிறது. சு.இரா. தமது அந்தோனிக்குட்டி அண்ணாவியார் : திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாடு (மணப்பார்) என்னும் ஊரிலே கத்தோலிக்க கிறிஸ் தவக் குடும்பத்தில் தோன்றினார். இவர் பரதவர் குலத் தார்; சிலர் இவரை ஈழுவர் குலத்தார் என்றும் கூறு கின்றனர். தூத்துக்குடியில் இவர் கிறிஸ்தவ வேத சாத்திரக் கல்வி பயின்றார்; தமிழிலும் சிறந்த புலமை பெற்றார். ஆசிரியத் தொழில் செய்தமை கருதி இவர் அண்ணாவி யார் என்னும் சிறப்புப் பெயரையும் பெற்றார். இவ ருடைய 'பேரின்பக் காதலுக்கு' உரைகண்ட அண் ணாப்பிள்ளை உபாத்தியாயர் தம் முகவுரையில் இவ ரைத் 'தூத்துக்குடி மகாவித்துவான்' என்று குறிப் பிட்டுள்ளார். 18ஆம் நூற்றாண்டில், வீரமாமுனிவர் இந்தியாவி லும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்து கிறிஸ்தவ மதத் தொண்டு செய்துவந்த காலத்தில் (1710-47), இவரும் சிறப்புடன் வாழ்ந்தனர் என்றும், முனிவரோடு இவர் நெருங்கிப் பழகி வந்தனர் என்றும் தெரிகிறது. அன்றி, இவர் வாழ்ந்த காலத்தைத் திட்டமாய் வரை யறுத்துரைக்கத் தக்க சான்றுகள் கிட்டவில்லை. கிறிஸ்து பெருமான்மீது இவர் பாடிய இசைக் கீர்த்தனைகளும் பிற கவிதைகளும் சிறுசிறு வெளியீடு