பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தாரியப்ப முதலியார் களாக அவ்வப்போது வெளிவந்தன. பின்னர், 1891-ல் இவர்தம் பாடல்கள் பலவும் ஒருங்கு திரட் டப்பட்டு, கிறிஸ்த சங்கீதம் என்னும் பெயருடன் யாழ்ப்பாணம் மானிப்பாய் அச்சியந்திரசாலையில் வெளியிடப்பெற்றது. இவர்தம் நூல்களுள் ஞானத் திருப்புகழ் பேரின்பக் காதல் என்னும் இரண்டும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் ஞானத்திருப்புகழ் அருணகிரிநாதரின் திருப்புகழ்போல சந்தவண்ணப் பாடல்களால் அமைந்துள்ளது. எடுத்துக் காட்டாக ஒரு பாடலை இங்கு நோக்குவோம். 'பாருலக வாசை யொன்று தேடுபொரு ளாசை யொன்று பாச மனையாசை யொன்று தொலையாத பாவவழி யானதொன்று நானுமதிலே நடந்து பாழ்நாகு வாதைகொண்டு துயரானேன் ஆருருது வாரிரங்கி யாருதவு வாருகந்துன் னதாவ லாம் லொன்று மறியேன லாளுவது நீயொழிந்து வேறுதுணை யார்சொ லிந்த வாதுதனை யேயறிந்து அருள்வாயே காரிருளை வேர்பிடுங்கு சூசியனொ ராயிரங்கள் காரிகைசொ ரூபமொன்றி காசினியின் வாழ்வை தம்பு பாதகளை யாளவந்த பணிவோனே வேரிகம ழாடரங்க மாடமணி யாடகங்கள் காரண சராசரங்கள் மேடைமுத லான தன்றி தொழுமாறு யிழிவான வேசரியு மாடிரண்டு பாரிசம தாகு மங்குல் வீடதனி லேபிறந்த முதலோனே.(44) பேரின்பக்காதல்' என்னும் நூலும் இறை ஞானத்தை ஊட்டுவதாகும். இந்நூலைப் பலரும் அச் சிட்டு அந்நாளில் பரப்பி வந்தனர். மு.ச. அந்தாரியப்ப முதலியார்: அந்தாரி என்பது அததா, அரி என இரு மொழி சேர்ந்து ஆன ஒரு பெயர்; அடியரல்லார்க்குப் பொல்லான் என்று பொருளாம். ஆகவே, அடியார்க்கு நல்லான் என்பது கருத்து. இவரைக் குறித்துத் தொண்டை மண்டல சதகம் (51),சோழ மண்டல சதகங்களால் (52)ஒரு சில செய்திகள் தெரியவருகின்றன. 'கம்பன் என்றும் கும்பன் என்றும்' என்று தொடங்கும் வெண்பா ஒன்று தொண்டை மண்டல சதகத்துள் மேற்கோ ளாகக் காட்டப்பட்டுள்ளது. இப்பாடலால் இவர் சிறந்த புலமைபெற்றுப் பிற்காலத்து விளங்கியவர் என்பது போதரும். 14 இவர் தொண்டை நாட்டு 'வாயல்' என்னும் ஊரைச் சார்ந்தவர்; வேளாளர். இளமையில் இவர் சோழ நாட்டுக்கு வந்து, உறத்தூரில் வாழ்ந்த தமிழ்வல்ல ஓர் அந்தணப் புலவருக்கு அடிமையாய், அவர்பால் கல்விச் செல்வத்தைப் பெற்றார்; புலமை யில் சிறந்து நல்ல கவிஞரானார். அந்நாளில் திருவாரூ ருக்கு அண்மையில் உள்ள கன்றாப்பூர்த் தலைவராகிய சிங்கராயர் இவருடைய அருமை அறிந்து, இவரை அடிமை கொண்டிருந்த அந்தண குருவுக்குப் பெரும் பொருள் கொடுத்து, இவரைத் தம்மிடத்திற்கு அழைத்துச் சென்று ஆதரித்தார். அச்சமயம் அச்சிங்க ராயர்க்குப் பகைவனாகிய கன்னைத் தண்டாயுதனாலும் இவர் நன்கு மதிக்கப்பட்டனர் என்பர். பின்னர், மதுரை மா நகரம் சார்ந்து, கல்லூர், மன்றை என்னும் ஊர்களின் தலைவரான கச்சிவீரப்பர் என்னும் அரசருடைய மந்திரி திருவிருந்தானால் ஆத ரிக்கப்பெற்றார். இங்குக் குறித்த கச்சி வீரப்பர் மதுரையை ஆண்ட நாயக்க அரசருள் கி.பி. 1609 முதல் 1623 வரை ஆண்ட முத்துவீரப்ப நாயக்கராவர். இதனால் இவர் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சிறப்புடன் விளங்கியவர் என்பது போதரும். அப்துர் ரஹ்மான்கான் செய்த நூல் 'சுந்தர பாண்டியம்' என்பதாகும். திருவிருந்தான் என்பாரின் தூண்டுதலால் இவர் இப்பெயர் தாங்கிய வட நூலைப் பின்பற்றிச் செய்யப் இது பெற்றது. மதுரைத் தலைவியாகிய தடாதகைப் பிராட்டியின் அவதாரம், திக்குவிசயம், திருமணம் முதலிய வரலாறுகளைக் கூறும் காவியமாகும். 8000 பாடல்களுக்கு மேற்பட்டது. ஆயின், இது இப் பொழுது குறைப்பிரதியாய் மதுரைத் தமிழ்ச் சங்கத் தில் உள்ளது. 'பாயிரம்' முதல் 'சிவராத்திரிச் சருக்கம்' வரை 2034 திருவிருத்தங்கள் எஞ்சியுள் இந்நூல் செய்யப்பட்டது சகம் 1486க்குச் சரியான கி.பி. 1564 ஆம் ஆண்டாகும் என்பர். செவ்வைச் சூடுவாரால் பாடப்பெற்ற பாகவத புராணத்தை அச்சிட்டோர் அது ஆரியப்பப் புலவரால் பாடப்பட்டது என்று சுட்டியதும், வேறு சிலர் அது அந்தாரியப்பப் புலவராதல் வேண்டும் என்று கொண்டு கூறியதும் 'கம்பன் என்றும் கும்பன் என் றும்' என்னும் தனிப்பாடலால் நேர்ந்த தவறுகளே யாம் என்பதனைச் செந்தமிழ்ப் பத்திரிகை நான்காம் தொகுதியில் (பக்கம். 871 - 375) மகாவித்துவான் ரா. ராகவையங்கார் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளார். ஆகவே, அந்தாரியப்பருக்கும் பாகவத புராணத் திற்கும் தொடர்பின்மையும் விளங்கும். 'சுந்தரபாண் டியம்' தவிர வேறு நூல்கள் இவர் பெயரால் வழங்கு வதாகத் தெரியவில்லை. மு.ச. அப்துர் ரஹ்மான்கான் (1844-1901) : இவர் ஆப்கானிஸ்தான அமீராக இருந்தவர். அப்சல்கான் என்பவரின் புதல்வர். இவரது பாட்டனாரான டோஸ்ட் முகம்மதுகான் என்பவர் தமது மூத்த மகனான அப்சல்கானை நீக்கி மூன்றாம் மகனான ஷெர்அலி என்பவரைத் தமது வாரீசாக நியமித்திருந்தார்; அவர் இறந்த பிறகு அவர் ஏற்பாட்டின்படி ஷெர் அலியே அமீராக அமர்ந்தார். அப்போது ஆப்கானிய வடமாகாணங் களின் கவர்னராயிருந்த அப்சல்கான் ஐந்து ஆண்டுக் காலம் கலகமிட்டு ஷெர்அலியோடு வெற்றிதோல்வி காண இயலாமல் அலியோடு ஒருவாறு சமாதானம் செய்துகொண்டார். இக்கலகப்போரில் அப்சல் கானின் புதல்வரான அப்துர் ரஹ்மான் போர்த்திற மையில் சிறந்து விளங்கினார். தந்தை சமாதானத் திற்கு வந்த பிறகும் மகனுடைய நோக்கங்களில் ஐயம் கொண்டிருந்த அமீர் ஷெர்அலி அப்துர் ரஹ்மானைக் காபூலுக்கு வரவழைத்தபோது, நிலைமையை நன்கு உணர்ந்துகொண்ட அவர் ஆக்ச ஆற்றைக் கடந்து போக்காராவிற்கு ஓடிவிட்டார். ஷெர்அலி, அப்சல் கானைச் சிறைப்படுத்தினார். உடனே ஆப்கானிஸ்தா னத்தின் தென்பகுதியில் கலகம் தோன்றிற்று. அதை அடுத்து அப்துர் ரஹ்மான் தலைமையில் வட பகுதியிலும் கலகம் வலுத்தது. சிலகாலம் ஆங் காங்குச் சிறு சண்டைகள் நடந்த பிறகு 1866-ல் அப்துர் ரஹ்மானும் அவரது சிறிய தந்தையான அசீம்கானும் காபுலைக் கைப்பற்றினர். ஷெர்அலி 1866 மே மாதம் ஒன்பதாம் நாளில் அப்துர் ரஹ்மா னிடம் தோற்றோடினார். அப்சல்கான் அமீரானார். அப்சல்கான் அவ்வாண்டிறுதியில் இறந்தார். அப்போது அவர் தம்பி அசீம்கான் அமீரானார்; அப்துர் ரஹ்மான் வடமாகாணங்களில் கவர்னர் பதவி ஏற்றார். நாட்டை விட்டு ஓடிய ஷெர்அலி 1869-ல்) பெரும் படைபலத்தோடு திரும்பி வந்து காபுலில் அசீமையும் அப்துர் ரஹ்மானையும் வென்று ஆப்கானிய அரசைக் கைப்பற்றினார். அசீம் - 1869-ல் பாரசீகத் தில் இறந்தார். ஆனால் அப்துர் ரஹ்மான் பாரசீகத்தி