பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தம்

49

இரத்தம் ஊட்டல்

கள், வெள்ளணுக்கள் முதலிய பொருள்களையுடைய இரத்தம் ஓடுகிறது. மீன், தவளை முதலியவற்றில் நிணநீர் மண்டலமானது இடைவெளிகளும் நாளங்களும் உள்ளது. பாலூட்டிகளில் இடைவெளிகளைவிட நாளங்களே மிகுதியாக இருக்கின் றன. லிம்ப் (Lymph) என்னும் நிணநீர், இரத்தத்திலிருந்து தந்துகி வழியாக வெளிவந்த பிளாஸ்மாவும் வெள்ளணுக்களும் உள்ளது. பலவணு விலங்குகளின் அணுக்கள் நீரில் மீன்போல நிணநீரால் சூழப்பட்டுக் கிடக்கின்றன. தந்துகிகளிலிருந்து உணவும் ஆக்சிஜனும் நிணநீருக்குள் வந்து, அதிலிருந்து உயிரணுவினுள் புகுகின்றன. கழிவுப் பொருள் உயிரணுவிலிருந்து நிணநீருக்குள் வந்து, அதிலிருந்து தந்துகிக்குள் புகும். ஆகவே ஓரணுவுயிர் எவ்வாறு

சிரைக் கதவு

A. சிரைக் கதவுள்ள ஓரிடத்தில் சிரையின் ஒரு துண்டை நீளத்தில் அறுத்துக்காட்டி யிருக்கிறது. பிறைபோன்ற இரண்டு பைகள், சிரைச் சுவரின் மடிப்பினால் ஆனவை ஒரே மட்டத்தில் இருக்கின்றன. அவையே கதவுகள்.

B சிரையில் இரத்தம் இதயத்தை நோக்கி ஓடும். அப்போது சிரைக் கதவுப்பை சிரைச் சுவரோடு சேர்ந்துகொண்டு இரத்தம் ஓடுவதற்குத் தடைசெய்யாமல் இருக்கும்.

C. சிரையை இதயத்திற்கு எதிர்முகமாக அழுத்திக்கொண்டு போனால் இரத்தம் கதவுப் பைகளில் நிறைந்துகொண்டு சிரை வழியை அடைத்துவிடும். இரத்தம் பின்னுக்குப் போகாது. முன் கையில் காணும் பச்சை நரம்பு என்று சாதாரணமாகச் சொல்லுகிற சிரையை அங்கையிலிருந்து முழங்கை நோக்கி அழுத்திக்கொண்டு சென்றால் சிரைக் கதவுகள் உள்ள இடங்கள் சிறு முடிச்சுக்களைப் போல உப்பிக்கொள்வதைக் காணலாம்.

நீரிலிருந்து உணவையும் ஆக்சிஜனையும் பெற்று, அதில் கழிவுப்பொருளை விடுகிறதோ, அவ்வாறே பலவணு உயிர்களிலுள்ள அணுவும் தன்னைச் சுற்றியுள்ள நிணநீரிலிருந்து அவற்றைப் பெற்றும், கழிவுப்பொருளை அவற்றுள் விடுத்தும் வாழ்கிறது.

முதுகெலும்புப் பிராணிகளில் மீனின் இதயத்தில் ஓர் ஆரிக்கிளும் ஒரு வென்ட்ரிக்கிளும் உண்டு. பெரிய சிரைகள் வழியாக ஆரிக்கிளுக்கு வரும் இரத்தம், வென்ட்ரிக்கிளுக்குப் போய், அங்கிருந்து பல்பஸ் ஆர்ட்டீரியோசஸ் என்னும் அறையைக் கடந்து, செவுள் தமனிகள் வழியாகச் செவுள்களுக்கு வந்து சேருகிறது. இந்த இரத்தம் அசுத்த இரத்தம். இது செவுள்களின் தந்துகிகள் வழியாக ஓடும்போது நீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜன் இரத்தத்துள் புகும். இரத்தத்திலுள்ள கார்பன். டை ஆக்சைடு நீருக்குள் போய்விடும். இவ்வாறு அசுத்தமான சிரைரத்தமானது சுத்தமானதும் சிவப்பானதுமான தமனிரத்தமாக மாறும். செவுள் தந்துகிகளிலிருந்து இரத்தம் பெருந்தமனிக்கு வருகிறது. அதிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் போய்ச் சிரைகள் வழியாகத் திரும்ப இதயம் வந்து சேரும். ஆகவே மீனின் இதயம் முற்றிலும் சிரைரத்தம் உள்ளதாகும்.

தவளை வகைகளில் இதயத்தில் இரண்டு ஆரிக்கிள்களும் ஒரே வென்ட்ரிக்கிளும் உண்டு. உடலின் பல பாகங்களிலிருந்து வலது ஆரிக்கிளுக்குச் சிரைரத்தம் வந்து சேரும். அங்கிருந்து வென்ட்ரிக்கிளுக்கு வரும். அங்கிருந்து பெருந்தமனி வழியாகப் புறப்படும். பெருந்தமனியிலிருந்து ஒரு பகுதி நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்கும், மற்றப் பகுதி உடலின் மற்றப்பாகங்களுக்கும் போகும். நுரையீரலுக்குப் போகும் இரத்தம் ஆக்சிஜனைப் பெற்று, தமனிரத்தமாக மாறி, நுரையீரல் சிரைகள் வழியாக வென்ட்ரிக்கிளுக்கு வந்து சேரும். அங்கு வலது ஆரிக்கிளிலிருந்து வரும் சிரை இரத்தத்தோடு ஓரளவுக்குக் கலக்கும். பெருந்தமனியின்

இதயத் துடிப்பு

1. வென்ட்ரிக்கிள் விரிந்திருக்கும் நிலை.
2. வென்ட்ரிக்கிள் சுருங்கியிருக்கும் நிலை.
V. V. பெருஞ்சிரைகள்.
a. ஆரிக்கிள்.
V. வென்ட்ரிக்கிள்.
M. ஆரிக்கிளுக்கும் வென்ட்ரிக்கிளுக்கும் இடையிலுள்ள இதழ்க் கதவு.
a. தமனி.
s. தமனியின் முதலில் உள்ள பிறைக் கதவு.
1-ல் பிறைக் கதவு முடியும் இதழ்க் கதவு திறந்தும் இருக்கின்றன. இரத்தம் ஆரிக்கிளிலிருந்து வென்ட்ரிக்கிளுக்குள் பாய்கின்றது.

2.ல் பிறைக் கதவு திறந்தும் இதழ்க் கதவு முடியும் இருக்கின்றன. இரத்தம் வென்ட்ரிக்கிளிலிருந்து தமனிக்குள் பாய்கின்றது.

அடிப்பகுதியிலுள்ள சுருள்கதவு என்னும் ஒரு மடிப்பின் உதவியால் வென்ட்ரிக்கிளுக்கு வந்த சிரைரத்தம் நுரையீரலுக்கும், தமனிரத்தம் உடலின் மற்றப் பாகங்களுக்கும் போகின்றது.

பல்லி, ஓணான் முதலிய ஊர்வனவற்றில் இரண்டு ஆரிக்கிள்களும் ஒரு வென்ட்ரிக்கிளும் உண்டு. வென்ட்ரிக்கிளில் ஒரு தடுப்பு இடையில் உண்டாகி, அதை இரு பகுதிகளாகப் பிரிக்க உதவுகிறது.

பறவைகளிலும் பாலூட்டிகளிலும் இரண்டு ஆரிக்கிள்களும் இரண்டு வென்ட்ரிக்கிள்களும் இருக்கின்றன. பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தவனான மனிதனது இதயத்தின் அமைப்பும் இரத்தவோட்டமும் இதயம் என்னும் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இரத்தத்தின் அமைப்பையும் வேலையையும் இரத்தம் என்னும் கட்டுரையில் சொல்லியிருக்கிறது.


இரத்தம் ஊட்டல் என்பது ஒரு பிராணியின் உடலில் ஓடும் இரத்தத்தை மற்றொரு பிராணியின் உடலில் ஓடுமாறு செய்வதாகும். முதன்முதல் இரத்-

7