பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


Range (a) mountain ; (b) extent : (a) தொடர் ; (b) வியாப்தி

Range map : வேறுபாட்டின் மேப்பு

Ranging rod : [சர்வே கோட்டு] முனை காட்டும் கோல்

Rapid : சிறிய நீர் வீழ்ச்சி

Rarefaction : விரிவடைதல்

Ratio : விகிதம்

Ratooning : ரேட்டூனிங் [புனர் பயிர் செய்தல்]

Raw material : மூலப்பொருள்; கச்சாப் பொருள்

Ray diagram : கிரணப்படம்

Realm : மாநிலம்

Recession : பின்னிடல்

Reciprocal levelling : பரிமாறும் (பொருட்டு) உயரம் அளத்தல்

Reclamation : நிலம் பண்படுத்தல்

Reconnaissance method : நோட்டம் அறியும் முறை

Reconstruction : (மாறுதலுக்கு) முன்னிருந்த நிலையை நிர்ணயித்தல்

Reconstructed profile : முன்னிருந்த நிலைமை தோற்றும் குறுக்கு வசப்படம்

Rectangle : நீள் சதுரம்; செவ்வகம்

Rectification : பிழை நீக்கல்

Recumbent fold : படிந்த மடிப்பு

Reef : பார்

Reduction of map : [படத்தை] மேப்பைச் சிறிதளவாக்கல்

Reflection : பிரதிபலித்தல்

Refraction : ஒளிக் கோட்டம்

Refrigeration : குளிர்ப்படுதல்