பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமுவின் மர்மம்

"ஆனாலும் இத்தனே புத்திமட்டம் உண்டாகு மென்று எண்ணவே இல்லை. மனுஷனுக்கு அங்தஸ்து என்ற சமாசாரம் ஒன்று இருப்பதை எள்ளளவாவது நினைக்கவேண்டாமா? வக்கிலெங்கே, சமையற்கார னெங்கே இரண்டு பேரும் கூடிக் கூடிப் பேசினல் அவன் எப்படி உருப்படுவான்? ரஸ்த்திற்கு உப்புப் போட்டால் புளி இருப்பதில்லை; புளி இருந்தால் உப்பு இருப்பதில்லை. இந்த லக்ஷணத்தில் சம்பளம் மட்டும் சுளேயாக மாதம் பிறந்ததும் இருபத்தைங்து ரூபாய்” என்று அம்மணியம்மாள் கூடத்தில் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தாள். அதைக் கேட்பவர்கள் யார் தெரியுமா? அவளுடைய குமாரி அம்புஜமும் காலுவயசுப் பையன் சங்கரனும் பக்கத்துவீட்டுப் பாட்டியும் காலங்த கம்பங்களுமே.

'காலுபேர் வெளியூரிலிருந்து வந்துவிட்டால் பரபரவென்று சமைத்து ருசியாகப் பருப்போ பாய சமோ பண்ணி வேளைக்குப் போட்டு நல்லபேர் எடுக்க வேண்டாமோ? யாராவது அப்படி வந்துவிட்டால் எனக்கு வங்தது சனியன். இவாள்' என்மேல் சீறிவிழ ஆரம்பித்துவிடுகிருர்கள். நானும் சமையற் *ாரனுக்கு உதவி செய்யவேணுமாம்! இந்த வெட்கக்