பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கலைஞன் தியாகம்

"எப்படி இருக்கிறது?’ என்று கேட்டான் தாமோதரன். -

அதற்குப் பதில் அளிக்காமல், 'சரி, இதற்கு எவ்வளவு பணம் வேண்டும்?' என்று கேட்டார் ஜமீன்தார்.

'இரண்டாயிரம்.'

'நான் போய் உங்களுக்குச் செக் அனுப்புகிறேன். அப்பால் இந்தப் படத்தை வாங்கிக் கொள்கிறேன்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு உடனே எழுந்து போய்விட்டார். முன்னலே காட்டிய படங்களைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போன அவர் அந்தப் படத்தைக் கண்டால் ஸ்தம்பித்து மெய்ம்மறந்து விடுவாரென்று தாமோதரன் கினேத்திருந்தான்். அவரோ, அதைப் பார்த்தார். அவ்வளவுதான்். வியப்பையோ, சங்தோஷத்தையோ அடைந்ததாகத் தோன்றவில்லை. அவ்வளவு சீக்கிரமாக அவர் எழுந்து போய்விட்டதற்கும் காரணம் தெரியவில்லை.

2

நான்கு நாட்கள் கழித்துத் தாமோதரனுக்கு ஜமீன்தாரிடமிருந்து செக் வந்தது. அதோடு அந்தப் படத்தைத் தம் பங்களாவில் கொண்டுவந்து கொடுக் கும்படி ஒரு கடிதம் அவர் எழுதியிருந்தார். தாமோதரன் அன்று மாலே தன் காரில் குமாரபுரி ஜமீன்தார் வீட்டிற்குச் சென்ருன். அவரைத் தனியே ஓர் அறையிலே சக்தித்துப் படத்தைச் சமர்ப்பித்தான்். 'உங்களைப்போலச் சித்திரக்கலையின் அருமை அறிந்த