பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கலைஞன் தியாகம்

அவர்கள் ஆசையில் மண் விழுங்தது. தீபாவளி யன்று காலையில் அங்தப் படுபாவி காத்தான்் எப் படியோ பணம் இருக்கும் இடத்தைக் கண்டுகொண் டான், ஒருவருக்கும் தெரியாமல் அதை எடுத்துக் கொண்டுபோய்க் கள் குடித்துவிட்டு வங்தான்்.

"இக்தா, இந்தப் பாவம் உன்னே ஏளேளு சன் மத்துக்கும் விடாது. தம்பிக்குச் சாயவேட்டி வாங் கணும்னு எத்தனே ஆசையாச் சேத்து வச்சேன்! பாவி, நீ அதையும் திருடிக் குடிச்சுட்டு வங்தையே’ என்று மாரியாயி திட்டினள்.

'என்னடீ, தலைக்கிறுக்கு ரொம்பத்தான்் ஏறிக் கிட்டுதோ சாயவேட்டி இல்லாமே அவனுக்குச் சரிப்படலையோ?” என்று அங்த மிருகம் உறுமியது.

"ஆமா, நீ சம்பாரிச்சுத் தராவிட்டாலும் நான் வச்சிருங்ததை எடுத்து அகியாயமாக் குடிச்சுட் டையே; அந்தக் கொளங்தைக்கு என்னத்தைக் குடுப் பேன்?' என்று அவள் அழுதாள்.

"என்னலே, மாமாலம் பண்ணறே வெளக்கு மாத்துக் கட்டெக்குப் பட்டுக் குஞ்சலம்' என்று சொல்லிக்கொண்டே காறித் துப்பிவிட்டு அவளே ஓர் உதை உதைத்தான்். அவள் தடாலென்று தரை யிலே விழுந்துவிட்டாள்.

இவ்வளவையும் முனியன் மூலையில் நின்று நடுங் கிக்கொண்டே பார்த்தான்். அவன் இருதயம் படக்குப் படக்கென்று அடித்துக்கொண்டது. அப்பனே அப் படியே பிடித்துக் கசக்கிவிட வேண்டு மென்ற ஆத்திரம் உண்டாயிற்று.