பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பொம்மை

நவராத்திரி காலத்தில் ஸம்பாதிப்பதுதான்் உருப்படியாக கிற்கும். ராத்திரி பகலென்று பாராமல் உழைத்தால் பலனுண்டு. அவளுக்கு அவளுடைய கைதான்் சொத்து. தன்னுடைய கைத் திறமையினால் அவள் ஜீவித்து வந்தாள். அவள் புருஷன் இருந்த காலத்தில் அவள் இருந்த கிலேயே வேறு; இப்போது இருக்கும் கிலேயோ வேறு. ஆனல் இரண்டு காலங்களிலும் அவள் மனம் வைத்து உழைப்பதில் மாத்திரம் வஞ்சகம் செய்வதில்லை. மண் பொம்மைகளைச் செய்து வர்ணம் பூசி விற்று ஜீவனம் பண்ணி வங்தாள். அவளுக்கு வாழ்க்கையில் கம்பிக்கை ஊட்டி நிற்பவன் அந்தச் சிறு குழந்தை வேலன் ஒருவன்தான்். அவன் ஒரு வ ய சாக இருக்கும்போது அவன் தங்தை இறந்துபோனன். இப்போது அவனுக்கு அப்பாவைப்பற்றி ஒன்றும் தெரியாது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அம்மா வுக்குள் அடங்கியிருக்கிறதென்பது அவன் நம்பிக்கை.

குப்பம்மாள் இந்த நவராத்திரியில் கொஞ்சம் பணம் மிகுத்தால் தன் பையனேப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து இரண்டு கோணல் எழுத்து வரப் பண்ணலா மென்று எண்ணியிருந்தாள். அவனுக்கு ஐந்து வயசு கடந்தாலும் அவனுடைய சுறுசுறுப்பும் சூட்டி கையும் அவள் கெஞ்சிலே ஒரு பெருமிதத்தை