பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பொம்மை 149

உண்டாக்கின. பொம்மை பண்ணும் வீட்டில் பிறந்தால் என்ன? அவன் படித்துப் பட்டம் பெற்றுக் கலெக்டராக வரக்கூடாதா என்ன? மண் பொம்மை களேப் பண்ணிச் சாலிவாகனன் பெரிய அரசனுக வந்தான்ென்ற கதையை அவள் கேட்டிருக்கிருள். ஆகையால் தன்னுடைய கம்பிக்கை ஸாத்தியமானதே என்று அவள் நிச்சயித்தாள். தன் கண்ணுக்குக் கண்ணுக வேலனே வளர்த்து வந்தாள்.

அவனுக்கும் பொம்மை பண்ணத் தெரியும். அவனுடைய ஆசையில், ஆர்வத்தில், உழைப்பில் குறைவு ஒன்றும் இராது. ஆனல் அந்தப் பொம்மை ஏதோ ஒர் உருண்டையாக இருக்கும். அதற்குக் கைகால் முகமெல்லாம் அந்தக் குழந்தையின் கற்பனை யளவிலே கின்றுவிடும். 'உன் பொம்மை நன்ரு யில்லை' என்று குப்பம்மாள் சொல்லமாட்டாள். 'ரொம்ப கன்ருயிருக்கிறது. வயது வந்தால் நீ பெரிய கெட்டிக்காரகை ஆவாய். உன் பொம்மைக்குக் கிராக்கி ஏற்படும்' என்று சொல்வாள்; அடுத்த கணமே, 'சி என்ன பைத்தியக்காரத்தனம்! இந்தக் கேவலமான ஜீவனம் இந்தக் குழங்தைக்குமா வரவேண்டும்? இவன்தான்் படித்து உத்தியோகம் பார்க்கப் போகிருனே! என்று எண்ணுவாள்; அந்த எண்ணத்திலேயே ஒரு குதுாகலம் உண்டாகும்.

'அம்மா, அம்மா, இதோ பார் என் பிள்ளையார்” என்று காட்டுவான் குழந்தை. அது பிள்ளையாராகவும் இராது; குரங்காகவும் இராது; வெறும் மண் உருண்டை; அதுவும் கோணல் மாண லான உருண்டை.