பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவராத்திரிப் பொம்மை 153

இந்தக் கேள்வியை இதுவரையில் ஒருவரும் கேட்கவில்லை. குழந்தை இதற்குத் தயாராக இல்லே. 'என்ன விலை? ... என்ன சொல்வது? அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. குழங் தை யி னிடமிரு ங் து விடை வரத் தாமதப்பட்டது. கிழவர் காத்திருக்க வில்லை. சரி, இதை எடுத்துக்கொள்; பொம்மையை நான் வாங்கிக்கொள்ளுகிறேன்' என்று ஒரு காலணு காணயத்தைக் குழந்தையின் கையிலே வைத்து விட்டு அந்தக் களிமண் உருண்டையை அவர் வாங்கிக்கொண்டார்.

வேலன் முகம் மலர்ந்தது. அவன் வாழ்க்கையில் அது ஒரு பெரிய சங்தோஷமல்லவா? தன் பொம்மை கூட விலை போயிற்று, அவ்வளவு நேரம் சிரமப்பட்டுக் காத்திருந்ததன் பலன் அவனுக்குக் கிடைத்து விட்டது. ஒரே ஓட்டங்தான்்!

'அம்மா! அம்மா! வித்துட்டேன். இதோ காசு' என்று அம்மா கையிலே காசைக் கொடுத் தான்் அவன்.

குழந்தையைக் காணவில்லேயே என்று வருத்தப் பட்டுக்கொண்டிருந்த அவளுக்கு அவ னு ைடய வேகமான வார்த்தைகள் விளங்கவில்லே. அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு லேசில் நம்பிக்கை உண்டாகவில்லை. இதைப் போய் யார் வாங்கிக் கொள்வார்கள்?’ என்று அவள் கினைத்தாள். ஆனல், இவனுக்குக் காசு ஏது? - இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. .