பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது மட்டுமா?

பன்னிரண்டு வருவுங்களுக்குமுன் நடந்த நிகழ்ச்சி, கங்தசாமியின் அகக்கண்முன் வந்தது. அதே வாத் தியார் சுப்பராயர்தாம் தம்முடைய ஒரு சாண் பிரம் புடனும் கயிறு கட்டிய பழைய முக்குக்கண்ணுடி யுடனும் காட்சியளித்தார். இவ்வளவு வருஷங்களில் விசைக்கணக்கான காசிகா சூரணத்தை ஏற்றுமதி செய்த அவர் திருமூக்கு முன்னேக்கு இப்போது பெரி தாகி இருந்தது. தாலூகா போர்டு எடுபடுவதற்கு முன் தர்மபுரி தாலூகாவைச்சார்ந்த காவாப்பட்டியில் அவர் தலைமை உபாத்தியாயராக இருந்தார். அப் பொழுது பள்ளிக்கூடங்தான்் அவருடைய கோட்டை; பையன்கள் குடிஜனங்கள்.

'கோலாடாவிட்டால் குரங்கு ஆடாது' என்பது சுப்பராயர் மூலமந்திரம். பையன்களைக் குரங்கு களாகப் பாவித்த அவர், அந்த உபமானத்தை இன்னும் விரித்துத் தம்மைக் குரங்காட்டியாகப் பாவித்துக்கொண்டிருப்பாரா? அவ்வளவு துார ம் அவர் சிந்தனே செய்திருந்தால் அந்தப் பழமொழியை அவர் ஏன் திருப்பித் திருப்பிச் சொல்கிருர்? -

பையன்களே அடிப்பதென்றால் அவர் முறையே வேறு. குற்றவாளியாகிய பையனேப் பெஞ்சிமேலே குப்புறப் படுக்க வைப்பார். தலையையும் காலையும்