பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 - கலைஞன் தியாகம்

போதெல்லாம் ராமுவின் தாயும் பிறரும் துக்கம் பொங்க அழுதார்கள்; சீனுவின் தாயோ, அவனது கள்ளங் கபடற்ற மனத்திலே முளேத்த அன்பு இப்போது பற்றுக்கோடில்லாமல் தள்ளாடி கிற்பதை உணர்ந்து மறுகினள். அறிவுடைய பிள்ளேயாக இருப்பதிலும் ஓர் அபாயம் இருக்கிறதே என்று வருந்தினள். -

வருவான், வருவான்' என்று சொல்லி எவ்வளவு நாளைக்கு ஏமாற்ற முடியும்? சீனுவும் ராமுவை மறப்ப வகைக் காணவில்லை. அவனுடைய உத்ஸாகமெல் லாம் போயிற்று; முகத்திலே சோபை இல்லை; பேச்சிலே இன்பம் இல்லை; கடையிலே துள்ளல் இல்லை; எல்லாவற்றிலும் ஒரு வாட்டம். ஒரு துயரத் தின் சாயையே தோன்றி வளர்ந்துவந்தது. அவன் உடல் மெலிந்தது. - - - - --

"ஏது, இந்தக் குழந்தையும் அங்தக் குழங்தை போன இடத்துக்கே போய்விடுமோ?' என்று வீட்டிலுள்ளார் கினேக்கத் தொடங்கினர்; வயிறு பகீரென்றது. - - - - - - - - - - - - - - "ராமுவோடு பழகிய இடங்கள், ! ராமுவின் சாமான்கள் இவற்ருல் அவனது ஞாபகம் சீனுவுக்கு வருகின்றது; இந்த இடத்தை மாற்றில்ை ஒரு கால் இவனுக்கு அந்த ஞாபகம் மறந்தாலும் மறக்கலாம்' என்று யாரோ சொன்னர்கள். ராமசேஷையரும் சேவுையரும் இதைப்பற்றி ஆலோசித்தார்கள்.

'ஏதோ, எனக்குத்தான்் கொடுத்துவைக்க, வில்லை; அருமையான குழங்தையைப் பறிகொடுத் தேன். நீங்களாவது சீனுவை ஜாக்கிரதையர்கப்