பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 கலைஞன் தியாகம்

துக்கம் குறையுமே என்பது அவர் ஆசை. எவ்வளவோ வீடுகளில் சிறு குழங்தைகளே இல்லை. சில வீடுகளில் இடவசதி இல்லை. சில இடங்களில், 'குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்கும்பொழுதே வீட்டுக்காரர், அதெல்லாம் நீர் ஏன் விசாரிக்கிறீர்? வீடு பார்க்க வந்தீரா? குழந்தை பார்க்க வந்தீரா?” என்று வள்ளென்று விழுங்தார். அவர்களுக்கு ராமசேவுையர் குழங்தை பார்க்கத்தான்் வங்திருக்கிரு ரென்பது எப்படித் தெரியும்? -

கடைசியில் ஒரு வீட்டைப் பார்த்து அரை மனத்தோடு திட்டம் செய்தார். அந்த வீட்டில் இரண்டு குடும்பங்கள் குடித்தனம் இருக்கலாம். ஒரு பகுதியில் ஒருவர் இருந்தார். காலியுள்ள இடத்திற்கு ராமசேவுையர் வருவதாகச் சொன்னர். அங்கே குடியிருந்தவருக்கு இரண்டு குழந்தைகள். இரண் டாவது குழந்தைக்கு இரண்டு வயசு, அதை அசப்பிலே பார்த்தால் ராமுவைப்போல இருந்தது. 'இதுவும் ஈசுவரன் திருவருளே’ என்று எண்ணி ராமசேவுையர் அந்த வீட்டுக்கு முன்பணம் கொடுத்து விட்டார். அந்த வீட்டில் ஓர் இரத்தில் ஒழுகும். பெருச்சாளி உபத்திரவம் உண்டு; வீட்டுக்காரர் கொஞ்சங்கடக் கவனிக்கமாட்டார். மொட்டை மாடியிலே ஏறினல் அதற்குத் தனியாக வாடகை வாங்குவார்' என்ற குறைகளேப் பலர் அவரிடம் சொன்னர்கள். அங்கே குடியிருந்தவர்கூட, 'ஏதோ, ஆபீஸுக்குப் பக்கமாக இருக்கிறதே என்று வந்தேன். இப்போது ஏண்டா வந்தோமென்ருகி விட்டது; வேறு வீடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்'