பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும் 219

அவள் பயங்த கிலே உண்மையிலே வந்துவிட்டது. அப்பொழுது என் மனம் பட்ட வேதனையை எப் படிச் சொல்வேன்! என் கல்யாணம் முக்தி நடந்தால் இப்படி கடப்பேன்; உன் கல்யாணம் முந்தி நடக் தால் அப்படி நடப்பேன்’ என்று குதுாகலமாகப் பேசிய பேச்சுக்களும் எண்ணிய எண்ணங்களும் வீனகப் போய்விட்டனவென்ற உணர்ச்சி தோன்றி யது. அவளுக்குத் தைரியம் கூறிய நான்தான்் அதிக மாக அழுதேன். என்னுடைய தாய் தங்தையர்கூட என் துக்கத்தைப் பார்த்து வருத்தப் பட்டார்கள். 'நம்முடைய சிநேகம் ரெயில் வண்டிச் சிநேகம் ஆகி விட்டதுபோல் இருக்கிறதே!” என்று நான் வருங் தினேன். - .

'என்ன நீ இப்படிச் சொல்லுகிருய் அன்றைக்கு நீ சொன்னது ஞாபகம் இல்லையா? தபால் இருக் கிறது கடிதம்போட, ரெயில்வண்டி இருக்கிறது வந்து பார்க்க. அப்பா அம்மா தடை சொல்லப்போகிருர் களா?' என்று அவள் எனக்குத் தைரியம் சொன் ள்ை. தன் ஹிருதயத்துக்குள் அடித்துக்கொண்ட அடிப்பை அவள் வெளியிடவில்லை.

'அம்மாமி, அவள் கல்யாணத்துக்கு கான் அவ சியம் வருவேன்; பத்திரிகை அனுப்ப மறந்துவிடாதே யுங்கள்” என்று குஞ்சரி என் அம்மாவைப் பார்த் துச் சொன்னாள். அவள் தன் துக்கத்தை அமிழ்த் திக்கொண்டு மேலே விளையாட்டுப்பேச்சு வேறு பேசத் தொடங்கிள்ை. . .

"குஞ்சரி, என்னை மறந்துவிடுவாயா? கடிதம் போடாமல் இருந்துவிடுவாயா?”