பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடியும் - 231

டது. கிராமத்து ஜனங்கள் வம்பளக்க ஆரம்பித் தார்கள். என்னல் என் அருமை மாமாவுக்குப் பல வகையிலும் துன்பங்கள் ஏற்பட்டன. எ ப் படி யாவது ஒரு பிராமணனுக்குக் கட்டிக் கொடுத்து விடவேண்டுமென்று படாத பாடு பட்டார். பணம் இல்லாமல் என்னேக் கல்யாணம் செய்துகொள்ள இந்தத் தமிழ்நாட்டில் யாருக்குத் தைரியம் இருக் கிறது? அகம்பாவமும் போலிவீரமும் பேச்சளவில் தியாகமும் உடைய ஜனங்களின் கூட்டத்திலிருந்து அவஸ்தைப் படுவதைவிட என் அருமைப் பெற்ருேர் சென்ற வழியையே நானும் பின்பற்றிவிடலாமென்று எண்ணினேன்; ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.

'இன்னும் என்ன என்ன துன்பத்துக்கு ஆளாக வேண்டுமோ அவைகளையெல்லாம் பட்டுத்தான்ே சாகவேண்டும்?' என்ற வெறுப்போடு காலந்தள்ளி னேன்.

திடீரென்று ஒருவர் வங்தார். கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் கடந்தன. "இரண்டாங் தாரமாகப் போவது உனக்கு ஸம்மதமா?” என்று என் அருமை மாமா ஆதரவோடு கேட்டார். கணவன், கல்யா "ணம், வாழ்க்கை, சுகம் என்பவை என்னளவில் இல்லையென்றே நான் நிச்சயம் செய்துகொண்டிருங் தேன். என் மாமாவுக்குப் பாரமாக இருப்பதாவது நீங்கட்டுமென்ற நினைவு முன்வந்தது. ஒ. ப்பு க் கொண்டேன். . . . .

அம்மணி என் கண்மணி கம்பிக்கை இழந்த என் வாழ்க்கையில் நீ மறுபடியும் துணையாகத்