பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைந்த விளக்கு - 43

விளையாடுகிருன்! அவனுடைய மழலையைக் கேட்க வேண்டாமா? எனக்காக நீங்கள் புறப்பட்டு வரா விட்டாலும், அவனுக்காகவாவது வாருங்கள்” என்று அவள் கடிதம் எழுதினுள்.

'அடி பயித்தியமே என் குழந்தையைப் பார்க்க எனக்கு ஆவல் இல்லாமலா இருக்கும்? இங்கே எனக்கு ‘லிவு கிடைக்கிறது கஷ்டமாக இருக்கிறது. தவிர, இங்கே நானே இருந்து கவனிக்கவேண்டிய முக்கிய மான காரியம் ஒன்று இருக்கிறது. அது முடிந்தால், எங்கள் கம்பெனி துரை எனக்குச் சம்பளம் அதிக மாகப் போடுவான். நான் இங்கே இருந்து அந்தக் காரியத்தைப் பூர்த்திசெய்து எனக்குச் சம்பளம் அதிகமானல், அது கம் இருவருக்கும் நல்லதல்லவா? அதனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்திரு' என்று பதில் வந்தது. -

பின்னும் ஆறு மாதங்கள் ஆயின; "ஒரு வருஷம் ஆய்விட்டதே; உங்கள் மனம் இரங்கவில்லையா? உங்களுக்கு நான் என்ன குற்றம் இழைத்து விட்டேன்' என்று எழுதினுள் லக்ஷ்மி,

ஒரு மாதத்திற்கு அப்புறம், 'கான் இப்பொழுது சுற்றுப் பிரயாணத்தில் இருக்கிறேன். இந்தப் பிரயாணம் இன்னும் மூன்று மாதங்கள் செய்ய வேண்டியிருக்கும். அப்புறம் அங்கே வருவதைப் பற்றி யோசித்துக் கடிதம் எழுதுகிறேன். குழங் தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்' என்று விடை வங்தது. -

ஒரு வருஷத்துக்கப்பால் இரண்டாவது வருஷம் சென்றது; மூன்று வருஷங்களும் ஆய்விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/51&oldid=686213" இலிருந்து மீள்விக்கப்பட்டது