பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷப் பரீrை 51

ஒருவருக்கும் தெரியாது. அது பெரிய மூடுமந்திரமாக இருக்கும். எப்படியோ கம்பெனி ஆரம்பித்த நான் காவது மாதத்தில் வேலைக்காரர்களுடைய முன்பணங் களைப் பாங்கியில் போட்டுவிட்டு மூவாயிரரூபாய் லாபப்பணத்தைக் குலுக்கிக் கொண்டிருப்பார்.

இந்திரஜாலம், மஹேந்திரஜாலம் என்று வேறு எவைகளையோ சொல்வார்கள்; அதெல்லாம் பொய். முதலியார் பண்ணுவதுதான்் உண்மையான இந்திர ஜாலம். இன்றைக்கு ராத்திரி, பணமில்லாமல் இரண்டு வாழைப்பழத்தை உரித்துப் போட்டுவிட்டுப் படுப்பார். காலாவது மாதத்தில் ஆயிரக்கணக்கில் அவர் கையில் பணம் கொஞ்சும்.

இப்படி கடந்துவருகிறது அவருடைய கம்பெனி யென்றால், இன்றைக்கு எவ்வளவு லக்ஷம் சேர்த்து வைத்திருக்கிருர் என்ற கேள்வியை அல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்?

ஐயா, பிச்சை!” என்றால் அவர் கைக்குத்

தம்பிடியும் காலணுவும் வருவதில்லை. வெள்ளிக் காசைத்தான்் வீசி எறிவார். மாமன் மகளுக்குப் பிள்ளை பிறந்ததென்று கடிதம் வங்தது. பதினேராம் நாள் புண்யாஹவாசனத்துக்குக் காரில் போய் கின்றார். தொட்டில், குழந்தைக்குத் தங்க வளையல், தங்க அரைஞாண் முதலியவை, தாய்க்குப் புடைவை எல்லாம் சேர்ந்து இரண்டாயிர ரூபாய்க்குக் கணக் காகிவிட்டது. -

- எந்தமாதிரி சம்பாதிக்கிருரோ அந்தமாதிரி செல - வழிப்பதில் தீரர். அப்படியால்ை கையில் காசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/59&oldid=686221" இலிருந்து மீள்விக்கப்பட்டது