பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷப் பரீகைடி 53

முடிந்துவிடும். சொந்தத்திற்குச் சொந்தம்; வெகு காளாகத் தடையில்லாமற் பழகியவர்கள்; கல்யாண மாகும் பருவம். இவைகளைவிட வேறு என்ன வேண்டும்? வள்ளி தன் ஆருயிர்க்காதலனே உலகமறிய அன்பனக்கிக்கொள்ளும் காலத்தை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தாள். அவளுடைய மனம் குதுாகலத் துடன் அந்த நாளுக்கு அப்புறம் கடத்தப்போகும் வாழ்விலே நீங்திக்கொண்டிருந்தது.

வள்ளியின் தாயும் தகப்பனரும் இனிமேல் அவளுக்குக் கல்யாணம் செய்துவிடவேண்டுமென்று தீர்மானித்தார்கள். ரூபாய் பதியிைரமாவது செல வழிக்கவேண்டுமென்பது முதலியார் விருப்பம். போன வருஷத்திலேயே ஏதோ பேச்சுவரும்போது, பொன்னம்பலத்தினிடமே அவர், 'வ ள் வளி க் கு க் கல்யாணம் பண்ணினல் இருபதியிைர ரூபாயாவது செலவழிப்பேன். மாப்பிள்ளை ஆவென்று வாயைத் திறக்கவேண்டும்' என்று சொல்லியிருக்கிருர். இந்த வருஷத்தில் அவருடைய உதாரக்கை பையில் மூவாயிரத்துச் சில்லறை ரூபாய்களைத்தான்் மிச்சம் வைத்திருக்கிறது. அவர் சொன்ன இருபதியிைரத் துக்குப் போவது எங்கே? பதியிைரத்துக்குத்தான்் வழியேது? ஆனாலும் அவர் பயப்படவில்லை. எப்படி யாவது தகல்பாஜி'த்தனம் பண்ணி எண்ணுயிரம் சேர்த்து விடலாமென்ற தைரியம் இருந்தது. பணம் வரட்டுமென்று காத்திருக்க அவருக்கு மனமில்லை. பணம் தம் தயவை எதிர்பார்க்கவேண்டுமேயொழியத் தாம் பணத்தின் தயவை எதிர்பார்ப்பதே இல்லை யென்பது அவர் அடிக்கடி கூறும் வீர மொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/61&oldid=686223" இலிருந்து மீள்விக்கப்பட்டது