பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியின் நிழல் 67

விட்டுச் செல்வார்கள். அவளும் மிக்க அன்போடு அவர்களுக்கு ஏதேனும் சிற்றுண்டி தருவாள்.

இவ்வாறு பாட்டியின்பால் ஈடுபட்டவர்களுள் சிற்பியர் தலைவனும் ஒருவன். விமான வேலை நிறை வேறும் தறுவாயில் இருந்தது. அப்போது அவனுக்கு ஒரு யோசனே தோன்றிற்று. இந்த ஆலய கிர்மா ணத்திலே உண்டாகும் புண்ணியத்தில் ஒரு பங்கு இந்தக் கிழவிக்குப் பகிர்ந்து கொடுக்கவேண்டு மென்று அவன் எண்ணினன்.

'பாட்டீ, காளையோடு விமான வேலை முடிந்து விடும். மேலே கும்பம் வைக்க வேண்டியதுதான்் பாக்கி. இவ்வளவுகாள் நீ மிகவும் சிரமப்பட்டு எங்க ளுடைய தாகத்தைத் தீர்த்துவைத்தாய். உனக்கு அதனால் எவ்வளவோ புண்ணியம். உன்னுடைய பொருளாக அந்த ஆலயத்தில் என்றென்றும் கிலேத் திருக்கும் ஒன்றை வைக்கவேண்டுமென்பது என் ஆசை. ஏதாவது கொடு” என்ருன் சிற்பியர் தலைவன். 'நான் என்ன பெரிய காரியம் செய்துவிட்டேன்! குளத்து ஜலத்தைக் குடியென்று சொன்னேன். அவ்வளவுதான்ே! நீங்களெல்லாம் எவ்வளவோ புண்ணியவான்கள். இந்த உலகம் உங்களைப் பாராட் டிப் புகழும். மகாராஜாவின் கீர்த்தி உலகம் உள்ள ளவும் நிற்கும்” என்ருள் பாட்டி.

சிற்பியர் தலைவன் பாட்டியை லேசில் விடவில்லை. ஏதாவது - கொடுத்துத்தான்் ஆகவேண்டுமென்று வற்புறுத்தினன். 'என்னிடம் தங்கம் வெள்ளியா இருக்கின்றன? இங்த வாசலிலே படியாக இருக் கிறதே, இந்தக் கல்தான்் சிறிது உபயோகமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/75&oldid=686237" இலிருந்து மீள்விக்கப்பட்டது