பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமாத நட்பு 75

மெல்லாம் செய்தார். தம்முடைய பெண்ணைக் கூப் பிட்டு அன்று பாடச் சொன்னர்; அவளுக்கு அன்று விசேஷமாக அலங்காரம் செய்திருந்தார்கள்.

அவள் பாடினுள். ‘எப்படியிருக்கிறது பாட்டு?’ என்று என்னேக் கேட்டார்.

‘'தேவலே’ என்று சொன்னேன். 'என்ன, ஸார், பண்ணுகிறது? நல்ல பாட்டு வாத்தியார் கிடைப்பதில்லை. இருக்கிறவர்களைக் கொண்டு சரிப்படுத்தவேண்டியிருக்கிறது. இந்தக் குட்டிக்கு ஸங்கீதமென்றால் பைத்தியம். ஸ்தா பாட்டுத்தான்்.”

அப்படி ஸங்கீதப்பித்துடையவளாக அந்தப் பெண் எனக்குத் தோற்றவில்லை. யாரோ மூன்ருங் தரத்துப் பாட்டுவாத்தியாரோ அல்லது வீட்டிலுள்ள பெண்களோ சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். அபஸ்வரங்கள் அபரிமிதமாக அவள் பாடும்போது இருந்தன. ஆனலும் அதை ஸ்பஷ்டமாக கான் சொல்லலாமா? -

'ஒன்று உங்களைக் கேட்கலாமென்று இருக் தேன். உங்களுக்கு ஸங்கீதத்தில் அதிக விருப்பம் இருக்கிறதே. உங்கள் வீட்டில் எல்லோருக்கும் அப் படித்தான்ே?"

"ஆமாம்; என்னுடைய பையன் எல்லா ஸங்கீத ஸ்பைகளிலும் அங்கத்தினகை இருக்கிருன்.”

'அப்படிச் சொல்லுங்கள். ஆமாம். இந்தக் காலத்தில் காலேஜ் பிள்ளைகள் ஸங்கீதப் போட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/83&oldid=686245" இலிருந்து மீள்விக்கப்பட்டது