பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கலைஞன் தியாகம்

டாயிருக்கிறதுபோல் இருக்கிறதே?' என்று புன்னகை யோடு கேட்பார். - , -

"அதோ அந்த மூலையில் வைத்த சம்பங்கிக் கொடி பூத்திருக்கிறது, எசமான்” என்று சந்தோஷத் தோடு அவன் பதில் சொல்வான். - -

குப்புசாமிக்கு வேலேநேரம் என்பது இல்லை. அவன் எப்பொழுதும் தோட்டத்தில்தான்் இருப் பான். எப்பொழுதாவது வீட்டுக்குப் போவான். அவ னுடைய மகள் வள்ளிக்குங்கூடத் தன் கையால் ஒரு பூவை ஒடித்துக்கொண்டுபோய்த் தரமாட்டான். புஷ்பங்களே அங்த அக்தச் செடிகளிலோ கொடி களிலோ இருக்கும்போது பார்த்துக்கொண்டே இருப்பதுதான்் அவனுக்கு ஆனந்தம். ஏன் எச மான், பறவையின் சிறகை ஒடிப்பதுபோலப் பூவைக் கொத்தோடே ஒடித்து வைக்கிறதில் என்ன லாபம்? குழந்தையின் கையை ஒடித்தால் பாவமென்று சொல் கிருர்கள். மரம் செடி கொடிக்குக்கூட உசிர் இருக் கிறதாமே. அந்தக் கொடிகளிலும் செடிகளிலும் உள்ள பூவைப் பறிப்பதுமட்டும் பாவமல்லவா?" என்று அவன் முதலியாரைக் கேட்பான். முதலி யாருக்கு அது அசட்டுக்கேள்வியாகப் படும். அவன் குழந்தைக்கும் கொடிக்கும் வித்தியாசம் காணவில்லை. யென்பதை அவரால் பூர்ணமாக அறிய முடியவில்லை. பூவைப்பறிக்கிறது குற்றமால்ை பின் எதற்குத்தான்் செடிகொடிகளை வளர்ப்பது?" என்று எதிர்க்கேள்வி. போடுவார் முதலியார்.

ஏன்? குழந்தையின் முகம் அழகாயிருக்கிற தென்றால் அதைக் கழுத்திலிருந்து திருகியா அழகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞன்_தியாகம்.pdf/92&oldid=686254" இலிருந்து மீள்விக்கப்பட்டது