பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

☐17

என்று குறிப்பிட்டிருப்பதை மட்டும், அவரோடு நான் கலந்து கொள்ளுகிற கூட்டத்தில் கூறிவிட்டு, மேலுள்ள அடிகள் என் நினைவிற்கு வாராமையால் நிறுத்திவிடும்போது, அடுத்து பேசுகிற அவர், எஞ்சியுள்ள அடிகளைக் கூறி எதிரிலுள்ளவர் களின் பாராட்டுக்களைப் பெற்றுவிடுவார்.

ஆங்கில அறிஞர் மெக்காலே, தமிழறிஞர் ஆறுமுக நாவலர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், அரசியல் துறையில் தந்தை பெரியார், காமராசர் போன்றோர் நினைவாற்றல் மிக்கவர்கள். இந்தப் பட்டியலில் எனது நண்பர் கலைஞரும் சேருகிறார் என்பதற்கு மேற்கூறிய கவிதையே சான்று.

"பழைய நட்புக்கு போகிப்பண்டிகை இல்லை!"

ஒருவர் அறிமுகப்படுத்தித் தெரிந்து கொள்வதை விட, அவராகவே பிறரை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பேராற்றல் அவருக்குண்டு. திறமையை அவர் குறைத்து மதிப்பிடமாட்டார். அதே நேரத்தில் போற்றவும் தவற மாட்டார். அவரது"சங்கத்தமிழ்' நூலை வெளியிட்டவுடனே, ஒன்றில்.

"பழைய நட்புக்கு என்றும் போகிப் பண்டிகை இல்லை" என்றெழுதி, கையெழுத்திட்டு, துரைமுருகன் மூலமாக எனக்கு நேரில் கொடுத்தனுப்பினார். இன்றைக்கு அவரிருக்கும் நிலையில் என்னை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. திறமையுள்ளவன் நான் என்பதனால் என்னை நினைவில் வைத்திருக்கவும் மதிக்கவும் தவறவில்லை என் நண்பர் கலைஞர் என்பதற்கு இதுவே சான்று.