பக்கம்:கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

口21

கலைஞரின் ஆட்சி கவிதை போல் வாழ்க!

அரசியல் நாடகத்தில் அலிசுட வீர னாவான் இருவரில் ஒருவர் வேண்டும் எனும்நிலை வந்தால், 'நானே வரிசையில் முதல்வன், என்னை மதியுங்கள்” என்ப தெல்லாம் அரசியல் அறிவுப் பஞ்சம் உடையவர் வார்த்தை யாகும்!

அங்கொரு காம ராசர் அவரை நாம் அறிவோம். நாட்டில் இங்கொரு கலைஞர் மு.க.இவரையும் அறிவோம். ஒன்று சிங்கமாம்! மற்றொன் றென்னதெரியுமா? புலியாம்! எங்கள் தங்கமாம் கலைஞர் இன்று - தமிழ்நாட்டை ஆளு கின்றார்!

தலைவரின் தலைவர்,அண்ணா சாய்ந்தபின், இந்த நாட்டின் நிலைஎன்ன? என்றி ருந்த நேரத்தில் பதவி ஏற்று,மலைஎன விளங்கு கின்றார்மதயானைத் தந்தம் போன்ற கலைஞரின் ஆட்சி,என்றன் கவிதை போல் சிறந்து வாழ்க!

(1.4.1969 சுரதா கவிதை இதழ்)