பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

η


தஞ்சை கலைக்கூடம்


சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்

நான் மதறாஸ் மியூசியத்தைப் போய்ப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம், சிலைகளை, பலசரக்குக் கடைகளில், உப்பு, புளி, மிளகாய்,

வற்றல் முட்டைகளை அடுக்கி வைத்தாற்போல

அமுக்கி வைத்திருக்கிறார்கள். அங்குள்ளவர் களுக்கு, சிவனது மூர்த்தங்கள் என்ன என்ன வென்றோ, விஷ்ணுவின் அவதார வடிவங்கள் என்ன என்னவென்றோ தெரியவில்லை. ஆதலால் Siva Another form of Siva at 6:13;p at (pg 3 தெரிந்திருக்கிறார்கள். இக்கலைக்கூடத்தை உருவாக்கியவர்களோ, மிக்க பக்தி சிரத்தையோடு காரியங்களைச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு மூர்த்திக்கும் தனித்தனியாய்ப் பீடம்

அமைத்திருக்கிறார்கள். தேவார திருவாசகப்

பாடல்களை எல்லாம் சேகரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு முர்த்திக்கும் தனித்தனியாய் பீடம் அமைத்திருக்கிறார்கள். தேவார திருவாசகப் பாடல்களை எல்லாம் சேகரித்திருக்கிறார்கள். என்னைப் போல் பாமரர்கள் வருவார்கள் என்று தமிழில் விளக்கங்கள் எழுதி வைத்திருப்பதோடு, என்னை விடப் பாமரர்களும் வருவார்கள் என்று தெரிந்து, ஆங்கிலத்திலும் விளக்கங்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். இவர்களது முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன்.