பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GD GA தஞ்சை கலைக்கூடம் –

Q பேராசிரியர் வெங்கடாச்சலம்

சின்னஞ்சிறிய, மிக நுண்ணிய விதைக்குள் ஒரு பெரிய ஆலமரமே அடங்கிக் கிடப்பது போல, பின்னால் நிகழப்போகும் ஒரு பெரிய காரியத்தின் தோற்றுவாயாக ஓர் அற்ப சம்பவம் அமைந்து கிடக்கக்கூடும் என்பதற்கு தஞ்சைக் கலைக்கூடம் அழியாத சான்று.

1951 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது தஞ்சாவூரிலே. கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஒரு சிலையைத் தம்முருக்கு எடுத்துப்போக விரும்பினார். தஞ்சைக் கலெக்டரின் உதவியை நாடினார். அந்தச் சிலை தஞ்சாவூரின் வடபகுதியில் கருந்திட்டைக் குடியில் ஒரு வாய்க்காலில் விழுந்து கிடந்தது. அதனைப் பார்ப்பாரும் இல்லை, கேட்பாரும் இல்லை. அதனால் கலெக்டரும் “அது எப்படியாவாது போனால் சரி” என்ற பாவனையில் இசைந்தார். எல்லாரும் அதனை அனுப்பிவைக்க ஒருநாள் அங்கே போய்ச் சேர்ந்தார்கள். கலெக்டரும் அவரது பரிவாரங்களும் அவர்களோடு ஒரு புதுமுகமும் அங்கே செய்த ஆர்ப்பாட்டத்தைக் கண்ட மக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடினார்கள். மெல்ல மெல்ல என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தொடங்கினார்கள். அந்த ஜனக் கூட்டத்துள் திடீரென்று ஒரு புண்ணியவானுக்கு ஓர் ஆவேச உணர்ச்சி தோன்றியது போலும். உலகத்தைப் படைத்துக் கோடிகோடியாக மக்களையும் படைத்து, சலித்து எல்லாராலும் கைவிடப்பட்டு “சே! இந்த உலகமே வேண்டாம்” என்ற வெறுப்போடு வாய்க்காலில் விழுந்து கிடந்த அந்தச் சிலையை ஆம், அது படைத்தற்கடவுள் பிரம்மாவைப் பார்த்ததும் மங்கிக் கிடந்த பாச உணர்ச்சி பீறி எழுந்துவிட்டது போலும். அவ்வளவுதான்! கரந்தை மக்கள் சிலையை எடுத்துப்போகக் கூடாது என்று கரந்தை மக்களாக அடம் பிடித்தார்கள். இருந்த நிலைமை இப்படி ஆச்சரியகரமாக மாறிப் போனதும், அதிகாரிகளுக்கு வேறு ஒன்றும் செய்ய