பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 161

கல்லூரிப் பாடத்தை விட இவர்களின் பேச்சும் எழுத்தும் எனக்குத் தேனாக இனித்த பொற்காலம் அது.

எனக்கு மட்டுமல்ல. எத்தனை எததனையோ இளைஞர்கள் இவர் தம் பேச்சிலும், கலா ரஸ்னையிலும், தமிழ்ப் பற்றிலும், சொக்கிச் சுழன்ற காலம் அது.

திரு. பாஸ்கரன் அவர்களை, ரசிகமணி டிகேசி, பால் நாடார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் பிரதம சீடராய் என்று கூறலாம். பாஸ்கரனின் கம்பராமாயணப் பித்துக்கு அவர்களே காரண கர்த்தர்கள். மாணவப் பருவம் முதலே தமிழ்ப் பற்றுக் கொண்டிருந்த பாஸ்கரனுக்கு, 1930 ஆம் ஆண்டு வாக்கில் ஆனந்த போதினி முதலிய பத்திரிகைகளில் திரு. ரா.பி. சேதுப்பிள்ளையைப் போல் எழுதி வந்த பாஸ்கரனுக்கு, டிகேசியின் உறவும் தோழமையும் ஒரு பெரும் பொக்கிஷமாக இருந்து வந்தன. ரசிகமணி டிகேசி அவர்களுக்கு பாஸ்கரன் மூத்த மகன் மாதிரி! டிகேசியோடும் டிகேசியின் குடும்பத்தோடும் அவ்வளவு ஈடுபாடு கொண்டவர் அவர்.

ரசிகமணி டிகேசி என்னும் வரலாற்றை எழுதியிருக்கிறார் பாஸ்கரன். அந்நூலிலிருந்து பாஸ்கரனின் எழுத்து வன்மையையும், குரு பக்தியையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.

தமிழ் அறிஞர் முதலியார் (வெ.ப.சு. முதலியாரைப் பற்றி) என்னும் நூலையும், வேங்கடம் முதல் குமரி வரை போன்ற நூல்களையும் உயிருள்ள தமிழில் எழுதியிருக்கிறார் அவர்.

பாஸ்கரன் அவர்களின் பேச்சைப் போலவே எழுத்திலும் இனிமை, தெளிவு, மிடுக்கு, ரஸனை ஆகியவை மிளிரும்.

பாவம் என்கிறார்களே, அத்தகைய உணர்ச்சி வெளிப்பாடு, கம்பீரமாகத் துள்ளி விளையாடும் பாஸ்கரனின் பேச்சக்களிலும் எழுத்துக்களிலும்!

எதைச் சொன்னாலும் ரஸம் ததும்ப, உருவ அழகோடு, நாடகத் தன்மையோடு, வசீகரமாகச் சொல்வார் பாஸ்கரன்.

பாஸ்கரன் அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்கவர். மேலை நாட்டுக் கலை இலக்கியத்திலும், கீழை நாட்டுக் கலை இலக்கியத்திலும், பண்பாட்டிலும் தோய்ந்தவர்.