பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 கலைமன பாஸ்கரத் தொண்டைமான்

இருந்த ஆர்வமும் அதற்காக அவர்கள் ஆற்றிய தொண்டும் பார்க்கின்ற எல்லோர் நினைவுக்கும் வரும்.

எத்தனையோ துன்பங்கள் வந்தாலும் அவர்கள் செய்த பணி எல்லோரும் நினைவு கூர்ந்து போற்றும்படி இருக்கிறது. எங்கள் தந்தை, 1904 ஆம் ஆண்டு பிறந்தார்கள். இந்த ஆண்டு அவர்களது நூறாவது ஆண்டு. 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எனது தமக்கை இராஜேஸ்வரி நடராஜன் வீட்டில் அன்பர்கள் கூடி வழிபாடு செய்தோம். சிறிது கால தாமதம் ஆனாலும், நூற்றாண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகச் செய்ய எண்ணியிருக்கிறோம். இறையருளால் எங்கள் எண்ணம் ஈடேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரதி கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்