பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எங்கள் அண்ணாச்சி

s{ 

சாவித்திரி துரைராஜ்

எனது மூத்த அண்ணன் அமரர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்களின் கடைசித் தங்கை நான். நாங்கள், இளையவர்கள் எல்லோரும், அவர்களை அண்ணாச்சி என்றுதான் அழைப்போம். அது திருநெல்வேலி பழக்கம். அவர்களது நூற்றாண்டு மலர் வெளிவருவதை எண்ணி மிகவும் மகிழ்கிறேன். எங்கள் தகப்பனார் எனக்கு ஆறு வயதாக இருக்கும்போதே காலமாகி விட்டார்கள். ஆகவே அண்ணாச்சிதான் எனக்குத் தந்தைக்குத் தந்தையாக இருந்து கல்வி, திருமணம் போன்றவற்றை நிறைவேற்றி, தந்தை இல்லா குறை தெரியாமல் என்னை வாழ வைத்தவர்கள்.

எனது புகுந்த வீட்டில் எனது துணைவரின் தம்பிகளின் மேற்படிப்பு வேலை போன்றவற்றிற்கு எனது பெரிய அண்ணாவின் பெயரைச் சொல்லியே காரியத்தைச் சாதித்துக் கொண்டோம். துணைவரின் தம்பிகள் கல்லூரிப் பேராசிரியராகவும், பல்கலைக் கழகத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனது துணைவரின் தம்பிக்குப் பெண் பார்க்க நானும் எனது துணைவரும் விக்கிரமசிங்கபுரம் பண்ணையார் திரு. விஸ்வநாதத் தேவர் வீட்டிற்குச் சென்றோம். அப்போது அங்கிருந்த யாதவக் கல்லூரி முதல்வர் திரு. சொக்கலிங்கம் அவர்கள், பெண்ணின் தகப்பனாரிடம் அறிமுகம் செய்யும்போது எனது துணைவரை தொ.மு.பாவின் தங்கையின் கணவர், இவரது தம்பிதான் மாப்பிள்ளை என்றார். உடனே எந்த மறுப்பும் இல்லாமல் சம்மதம் தெரிவித்து ஒரு மாதத்திற்குள் திருமணம் முடிந்துவிட்டது. அவளும் ஓர் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

எனது துணைவரின் மூத்த தம்பிக்குத் தொ.மு.பாவின் மூத்த தங்கையின் புதல்வியைத் திருமணம் செய்து கொண்டதும் அதே