பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

தங்கையின் மகனுக்கு என் துணைவரின் தங்கையைத் திருமணம் செய்து கொடுத்துள்ளோம்.

எனது துணைவரின் தம்பிகள் அடிக்கடி என்னிடம், தங்கள் அண்ணாவின் பெயரை வைத்தே நாங்கள் முன்னேறிக் கொண்டோம் என்று கூறிப் பெருமைப்படுவார்கள்.

எனது துணைவரின் ஊர் பாரதி பிறந்த எட்டயபுரம். என் துணைவர் இலக்கியத்தில் ஆர்வமுடையவர். ஆகவே மூத்த மைத்துனரிடம் பல செய்திகளை அறிந்து கொண்டார்கள். மைத்துனரிடம் மதிப்பும் மரியாதையும் உடையவர். அவர்களிடம் பேசவே பயப்படுவார்கள். என் துணைவர் எட்டயபுரம் ராஜா உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றியவர்கள். எம்.ஏ. தமிழ் படித்திருந்தும் அந்தக் காலத்திலே கல்லூரி விரிவுரையாளர் பணி கிடைக்கவில்லை. பெரிய மைத்துனராகிய என் அண்ணாவிடம் சிபாரிசுக்கு சென்றபோது, அவர்கள் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் டுயூட்டர் பதவிதான் தருவார்கள் போல் உள்ளது என்றதும், என் துணைவர் செல்ல மறுத்துவிட்டார்கள். ஏனென்றால் உயர்நிலைப் பள்ளியில் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை விட டுயுட்டர் சம்பளம் மிகக் குறைவு. மேலும் எட்டயபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு தினமும் சென்று வரமுடியாத காலம் அது.

சில காலம் கழித்து நான் அண்ணாவிடம் எனது துணைவருக்கு கல்லூரி விரிவுரையாளர் பணி வாங்கித் தரும்படி கேட்டபோது, உனது துணைவர் விட்டிற்கு பின்னாலேயே கல்லூரி கேட்கிறாரே அது முடியுமா? என்று கூறிவிட்டார்கள். என்றாலும், அண்ணாச்சி உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது தனது மூத்த மகள் ராஜேஸ்வரியிடமும் அவளது துணைவர் திரு.வி.கே.சி. நடராஜனிடமும் சாவித்திரி மாப்பிள்ளைக்கு எந்தக் கல்லூரியிலாவது விரிவுரையாளர் பணி வாங்கிக் கொடுத்துவிடுங்கள் என்று கூறி உள்ளார்கள். அவர்களது முயற்சியால் என் துணைவர் உசிலம்பட்டித் தேவர் கல்லூரியில் விரிவுரையாளராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்கள். பின்னர் மதுரை செந்தமிழ் கல்லூரியில் 7 ஆண்டுகள் முதல்வராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று நெல்லையில் மகன் வீட்டிலும் பின்னர் சொந்த ஊரான எட்டயபுரத்திலும் 12 ஆண்டுகள் வாழ்ந்து தனது காலத்தை முடித்துக் கொண்டார்கள்.