பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 57

அது அவரிடத்தில் நிறைய இருக்கிறது. இந்த எழுத்தாளர் கலெக்டரை நான் பாராட்டுகிறேன்” என்று முடித்தார்.

கலெக்டர் போன்ற அதிகாரிகள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ய வேணுமானால் அவர் நேர்மையானவராகவும் திறமைமிக்கவராகவும் மட்டுமிருந்தால் போதாது. மனிதாபிமானமும் தைரியமும் உள்ளவராய் விளங்க வேண்டும். இந்த மனிதாபிமானத்தையும் தைரியத்தையும் பெற எனக்கு ரொம்பவும் உதவியது. எழுத்துத்துறை. ஆகவேதான் எழுத்தாளர், கலெக்டர் என்று பாராட்டப்பட்டதை நான் பெரிதாக மதிக்கிறேன்.

பி.கு : அப்போது முதலமைச்சராக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம்