பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= s ~ * r- நினைவுண்டு, நினைவுண்டு!

—-—

O

நினைவுண்டு! நினைவுண்டு! நான் பிறந்த வீடெதன்று நினைவுண்டு! நினைவுண்டு!

பல கணியின் இடைவழியாய் பகலவனின் கதிர் ஒளிகள் பலகாலும் பார்த்ததெலாம் நினைவுண்டு! நினைவுண்டு!

அண்ணனிட்ட விதை முளைத்து அழகாக வளர்ந்தோங்கி அணி அணியாய் மலர் சொரிந்து மனம் மகிழ வைத்ததுமே நினைவுண்டு! நினைவுண்டு!

மல்லிகையும் ரோஜாவும் மணமுடனே மலர்ந்தளித்த வண்ணக் கோல மெல்லாம் நினைவுண்டு! நினைவுண்டு!

சிட்டுக் குருவியைப் போல் சிறகடித்துப் பறந்ததுவும் சிறு குறும்பு செய்ததுவும் நினைவுண்டு! நினைவுண்டு!