பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

2

நூறு ஆண்டு வாழ்வது எப்படி? என்பது ஒரு பெரிய பிரச்சினை. இதற்கு என் பதில் “தமிழ்ப் படிப்பது” என்பதுதான். “என்ன ஐயா! தமிழ் படித்தால் நூறு ஆண்டு வாழ முடியுமா? இது என்ன நடக்கிற காரியமா, ஐயா!’ என்று பலர் சந்தேகிக்கலாம். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களையும், வெள்ளக்கால் முதலியார் அவர்களையும் பார்த்தவர்களுக்கு - ஏன்? கேள்விப்பட்டவர்களுக்குக் கூட இந்தச் சந்தேகம் எழ வேண்டிய அவசியமேயிருக்காதே! இருவருக்கும் வயது எண்பது ஆண்டுக்கு மேல் என்பது உலகம் அறிந்ததுதானே! இருவருஞ் செய்த தமிழ்ப் பணியைத் தமிழர்கள் மட்டுமா தெரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் படித்தால், தமிழ்த் தாய்க்கு சேவை செய்தால், இவர்களைப் போல் சேவை செய்ய வேண்டும் என்று மட்டும் கங்கணம் கட்டிக் கொள்ளுங்கள். அப்படியே செய்யவும் செய்யுங்கள், அதன் பின் நீங்கள் நூறு ஆண்டு வாழாவிட்டால் என்னைக் கேளுங்கள்.

பழைய நகைகளான சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி முதலியவைகளைப் புதுப்பித்துத் தமிழ்த்தாய்க்கு அணிவித்து, அவள் அழகைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார்கள் டாக்டர் ஐயர் அவர்கள். முதலியார் அவர்களோ, தமிழன்னைக்கு இந்தப் பழைய காலத்துக் கர்நாடக நகைகள் மட்டும் போதாது, புது அணிகளாலும் அவள் அலங்கரிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்கள் செய்து அணிவித்த அணிகள்தான் சுவர்க்க நீக்கம், அகலிகை வெண்பா, கோம்பி விருத்தம் முதலியன. இரு பெருங்கிழவரது சேவையையும், தமிழ் மக்கள் போற்றக் கடமைப்பட்டவர்களே.

3

முதலியார் அவர்கள் தொண்டைமண்டல வேளாளர் வகுப்பிலே, ஒரு உயர்ந்த குடும்பத்திலே பிறந்தவர்கள். திருநெல்வேலி ஜில்லாவில் பிரபலமான தளவாய் முதலியார் அவர்கள் குடும்பத்திலும், ஆறை அழகப்ப முதலியார் குடும்பத்திலும் சம்பந்தம் செய்து கொண்டவர்கள். இளமையிலேயே, இவர்களுக்குத் தமிழார்வம் ஏற்பட்டு விட்டது. இவர்கள் உள்ளத்தில் தமிழ்க் காதலை ஊட்டியவன், தளவாய் அரண்மனையில் வேலை செய்து வந்த முத்துச்சாமி பிள்ளை என்ற வேலையாள்தான். அவனுக்கோ இரண்டு கண்ணுந் தெரியாது. ஆனால் கதை சொல்லுவதிலோ சமர்த்தன். அவன் வேலை ஓய்ந்திருக்கும் நேரமெல்லாம், நமது முதலியார்