பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 71

அவர்களுக்கு, பாரதம் இராமாயணம், ஸ்காந்தம், திருவிளையாடற் புராணம் முதலிய கதைகள் சொல்வதிலே கழியும். அவன் தான் இவர்களுடைய தமிழ்ப் பயிற்சிக்கு மூல குரு. இவர்கள்தான் அவனது பிரதம சிஷ்யர். இப்படிக் குருட்டுக் குரு காட்டிய வழியிலே நடந்த முதலியாரவர்கள் நல்ல இளைஞராக இருக்கும்போது, திருநெலவேலி தெற்குப் புதுத்தெரு சவுக்கைப் புலவர்களின் பழக்கம் கிடைத்தது. சவுக்கையை அழகு செய்த வள்ளல் முத்துச்சாமி பிள்ளையவர்களும், கவிஞர் அழகிய சொக்காநத பிள்ளை, நெல்லையப்பன் கவிராயர், வேம்பத்தூர் பிச்சுவையர், முகவூர் கந்தசாமிக் கவிராயர், அருணாசலக் கவிராயர் சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் முதலியவர்களும் இவர்களுக்குத் தோழர்கள் ஆனார்கள். கேட்பானேன்! சிலேடையும், யமகமும், திரிபுமாகத் தமிழ்ப் பாட்டுக்களைக் கொட்டுக் கொட்டென்று கொட்டித் தள்ளிவிட்டார்கள். ‘நெல்லைச் சிலேடை வெண்பா எல்லாம், இந்தத் தமிழ்ப் பண்ணையில் உருவாக்கப்பட்டதுதான். (ஒரே ஒரு ரகஸ்யம், தப்பித்தவறி முதலியார் அவர்களிடம் போய் சிலேடை, யமகம், திரிபுகளில் என்ன இருக்கிறது? எல்லாம் சர்க்கஸ் வித்தைதானே! உண்மையான கவிதை அங்கு உண்டா என்று கேட்டு வைக்காதீர்கள். உடனே அவர்களுக்கு, உங்கள் பேரில் பழியான கோபம் வந்துவிடும். முஷ்டி யுத்தத்திற்குக் கூட வந்துவிடுவார்கள். உங்கள் அபிப்பிராயத்தை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.)

4

முதலியார் அவர்கள் ஆங்கிலங்கற்ற தமிழர். திருநெல்வேலி இந்து கலாசாலையிலும், சென்னை கிறிஸ்தவக் கலாசாலையிலும் படித்தார்கள். டாக்டர் மில்லர் போன்ற பேராசிரியர்களிடம் தான் படிக்க நேர்ந்த பாக்கியத்தை இன்றும் நினைத்து, நினைத்து உருகுகிறார்கள். சென்னை விவசாயக் கலாசாலையிலும், பம்பாய் வெட்டினரி கலாசாலையிலும் படித்து உயர்ந்த பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். கால்நடை மருத்தவ இலாக்காவில் ஆரம்பத்தில் மாதம் ருபாய் ஐம்பதே சம்பளமுள்ள ஸ்டாக் இன்ஸ்பெக்டர் வேலையில் தாக்கலாகி, பின்னால் உண்மையான உழைப்பினாலும், உயர்வான வேலைத் திறமையினாலும், ரூ. 300 சம்பளம் உள்ள டிப்டி சூப்பிரண்டு ஆகி, பிறகு (பென்ஷன்) பெற்றுக் கொண்டவர்கள். ஆனால், செல்வம், அதிகாரம் முதலியன சேர்ந்தவுடனே பிறமொழிகளை உயர்த்திப்பேசி, தமிழில் என்ன ஐயா இருக்கிறது? என்று தாய்மொழியைப் புறக்கணிக்கும் கூட்டத்தைச்