பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

சேர்ந்தவர்கள் அல்ல. ஆங்கிலக் கல்வியறிவால் தமிழர்களுக்கு ஏதாவது உதவிசெய்ய முடியுமா? என்றுதான் பலகாலும் சிந்தித்தார்கள். அந்தச் சிந்தனையின் பலன்தான் மிலிட்டன் எழுதிய “சுவர்க்க நீக்கத்தின் மொழிபெயர்ப்பு’, ‘கோம்பி விருத்தம் முதலிய நூல்கள். மிலிட்டனது காவிய்ம் ஒரு பெரிய கடினமான கருங்கற்பாறை என்று ஆங்கிலப் புலவர்களே சொல்லுவார்கள். ஒரு ஆசிரியர் பிரஞ்சு பாஷையில் அதை மொழிபெயர்க்க ஆரம்பித்து அப்படியே திணறிப்போய்விட்டாராம் முதலியார் அவர்களோ இந்தக் கருங்கற்பாறையையே உடைத்து, அதில் தமிழ்ப்பாட்டின் சுனையைக் கண்டுவிட்டார்கள். அந்தச் சுனை நீரை உண்டு, அதனுடைய புதிய ருசியைக் கண்டுதான் டாக்டர் ஜி.யு.போப் முதலிய அறிஞர்கள் திகைக்கிறார்கள்.

5

முதலியார் அவர்களின் தமிழ்க் கவிப் புலமையின் சிகரத்தைக் காண விரும்புபவர்களுக்குச் சுவர்க்க நீக்கமும், நெல்லைச் சிலேடை வெண்பாவும் உதவி செய்யாது. அவர்களுடைய கவி ஹிருதயம் முழுவதையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அகலிகை வெண்பாவைத்தான் பார்க்க வேண்டும். இந்திரனால் வஞ்சிக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட காரிகை அகலிகை, கெளதமரால் கல்லாய்ப் போகுமாறு சபிக்கப்படுகிறாள். “ஐயோ இந்தச் சாபம் இடுவதில்தான் எவ்வளவு கருணை காட்டிவிட்டார் என் கணவர்” என்று கனிவுடன் சாபத்தை ஏற்றுக்கொள்ளும் அகலிகையை,

‘எம்பெருமான் பேரருள் தான் என் என்பேன்! தாங்கவொனாத் துன்புறுவேன் யான் உணர்வு தன்னில் என்று-துன்புணராக் கல்லாக என்று கருணை வெள்ளத்து ஆழ்த்தினன் என் பொல்லாத குற்றம் பொறுத்து.” என்ற முதலியார் அவர்கள் பாட்டில் நாம் நேருக்கு நேராகச் சந்திக்கிறோம். அவளிடம் கொஞ்சம் இரக்கமும் காண்பிக்கிறோம்.

முதலியாரவர்கள் உத்தியோக முறையில் பல ஊர்களில் முகாம் செய்ததும், அங்கு படுக்கும் வசதிக்காக ‘கியாம்புக் கட்டில்கள் செய்ததெல்லாம் பெரிய கதை. ஒரு கட்டில் செய்வார்கள். அது கொஞ்சம் தொய்யும். உடனே அதை விறைப்பாகவே இருக்கும்படி செய்ய என்ன என்ன மாறுதல் செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசனை. இந்த யோசனையின் முடிவு, வேறு விதமாக வேறு கட்டிலைச் செய்வது. இப்படி ஒன்றைவிட ஒன்று நல்ல மாதிரியாக