பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSJ O

தேவனுடன் ஏழுநாள் —==

முன்னம்நின் அன்னை அமுதுட்டி மையிட்டு, முத்தமிட்டு கன்னமும் கிள்ளிய நாளல்லவே

என்னைக் காத்தளிக்க அன்னமும் மஞ்ஞையும் போல்இரு

பெண்கொண்ட ஆண்பிள்ளை நீ இன்னமும் சின்னவள்தானோ

செந்தூரில் இருப்பவனே” என்று ஒரு பாட்டு. ஆம். அந்தத் திருச்செந்தூர் அலைவாய்க்கரையிலே இருக்கும் அந்த ஷண்முகநாதனைக் காணச்சென்ற பக்தன் ஒருவன் பாடிய பாட்டுத்தான். இந்தப் பாட்டைச் சென்னையில் சில வருஷங்களுக்கு முன்னால் ஒரு கூட்டத்தில் சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறான் ஒரு பக்தன். அவன் நல்லவன். முருகன் குமரன் என்றால் அழகன் இளைஞன். தன் குறைகளை எல்லாம் முருகனிடம் சொல்ல ஆசைப்பட்டு, அவன் மிகவும் இளைஞன் ஆயிற்றே, இப்போதெல்லாம் தன் தாயின் மடியில் கொஞ்சி மகிழ்கின்ற பருவம்தானே, இன்னும் கொஞ்சம் பெரியவனாக வளரட்டுமே என்று காத்திருக்கிறான். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற பக்தன், அன்பர் ஒருவருடன், அவர் அழைப்பிற்கிணங்கி திருச்செந்தூர் செல்கிறான். ஷண்முக விலாசத்திற்குள்ளேயே நுழைகிறான். அங்கு வள்ளி தெய்வானை என்னும் துணைவியர் சமேதனாக, விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் எல்லாம் அணிந்து கொண்டிருக்கும் அந்த ஷண்முக நாதனையே காண்கின்றான். அப்போது கவிஞன் உள்ளத்தில் ஓர் ஆங்காரமே பிறக்கிறது. நம் குறைகளை எல்லாம் அறிய மாட்டானா இவன். அறிகின்ற பருவம் இல்லை என்று ஏமாந்து