பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறுப்பவர்கள். சிந்தாமணி அந்த வேதாந்தக் கருத்துக்களால் சாந்தியடைய மார்க்கமில்லை!...”

சிந்தாமணிக்காக ‘வக்காலத்து’ வாங்கிக் கொண்டு ‘சொந்தக் குரலில்’ (own voice) பேசுகிறார் ஆசிரியர். அபலை சிந்தாமணியின் கற்பின் மீது கற்பிக்கப்பட்ட மாசைத் துடைக்க ஆசிரியரின் ‘தமிழ்ப் பற்று’ இடங் கொடுக்காமல் நழுவி விடுகிறது!

புதினத்தைப் படைக்கும் ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய அலுவல் என்ன?

அவன் பாத்திரங்களை ஆளக்கூடாது.

‘வெள்ளிக்கிழமை’யில் கதாசிரியர் பாத்திரங்களை மேளதாளத்துடன்... ஆளுகிறார்.

நாவலாசிரியன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு தான் படைக்கும் பாத்திரங்களைப் பயன்படுத்துவானேயாயின், வாழ்க்கையின் விதிமுறையும் நவீனத்தின் விதி வழியும் காடுமாறிப்போய்விடுவது இயல்பு. அப்பால், கதைப்பாத்திரங்களை ‘ஓட்டை உடைசல் பாத்திரக்கடை’யில் தான் ‘பேட்டி’ காணவேண்டும்!

❖❖❖

சமுதாயத்தின் குறைபாடுகளை (social evils) அம்பலப்படுத்தக் கருதும் முயற்சியை யாவரும் பாராட்டுவர். ஆனால், வெறும் நாத்திகப் பிரசங்கத்தைப் பேச்சாளன் பாணியில் நின்று ‘ஒப்பாரி’ வைக்கும்போது, காது புளித்துப் போய்விடுகிறதல்லவா? தெய்வத்தை ‘நைத்தியம்’ செய்ய வேண்டுமென்றால், ‘கடவுள் இல்லாக் கொள்கை’யை (atheism) நிலைநிறுத்த விழைந்தால் ஒரு திராவிடத் தமிழனை உண்டாக்கி, அவனுக்குள்ளே கூடுவிட்டுக்

154