பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘அரவிந்தன்’ எனும் திண்மை மிக்க-குறிக்கோள் கொண்ட-கற்றுத் தேர்ந்த இந்தப் பாத்திரம்,என் முன்னே உருவாகிக் காட்டவல்ல தொரு முடிவினையும் நான் ஆராய்ந்து சிந்திக்கின்றேன். இமை வரம்புகளில் சுடுநீர் வரம்புகாட்டுகிறது. உண்மை சுடாமலிருக்காதாம்!

1925–1961

க. நா. சு. அவர்கன் இதோ, மீண்டும் திருவாய் மலர்ந்தருளத் தொடங்கிவிட்டார்:

“...1925 வாக்கிலே எழுதப்பட்டிருந்தால், தமிழிலே இதையும் ஒரு நல்ல நாவலாகச் சொல்லியிருக்கலாம். 1961ல் வெளிவருகிறதே?-என்ன செய்வது?...”

கால வித்தியாசம்

ன்பர் க.நா.சு. அவர்கள் ‘காலவித்தியாசம்’ காரணமாகத்தான், காலத்தைப்பற்றிக் கணிப்பதில் அடிக்கடி ஈடுபாடு காட்டி வருகிறார் காலம் என்பது பொற்கனவு. இன்றைய நிலையில் நின்று, நேற்றைய தினத்தைப்பற்றி நினைப்பவனின் நோக்கிற்கும் நோக்கத்திற்கும் காலம் ஒர் எழிற்கனவுதான்; அதே அளவில், இன்றைய நிலையில் லயித்திருந்து நாளையப் பொழுதைப்பற்றிச் சிந்திப்பவன், எதிர்காலத்தை கற்கனவாகச் சித்திரித்துக் கனவு காண்கிறான். கனவு காண்பது அவரவர்களின் மனத்தைப் பொறுத்தது. அதற்காக,—அதாவது அவரவர்கள் கனவுகள் அல்லது குறிக்கோள்கள், அல்லது மனக் குறிப்புக்கள் திட்டம் வகுத்துத் தாண்டும் அமைப்புக்குத் தக்கவாறு, காலம் மாறுவதற்கோ அல்லது

59