பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(IJныпIfollon}} 7 இதைக் கேள்விப்பட்ட பரசுராமன் மீண்டும், கார்த்த வீரியார்ஜூனனின் பிள்ளைகளின் நாட்டின் மீது படையெடுத்து அவர்களைவென்று தனது தந்தையின் தலையை மீட்டிக் கொண்டு வந்து ஆஸ்ரமத்தில் இருந்த உடலுடன் சேர்த்து தகனம் செய்து ஈமக்கடன்களை முடித்தான். இவ்வாறு கூடித்திரிய அரசர்கள் அறம் தவறி நடக்கின்றார்கள் என்று கருதி பரசுராமர், இருபத்தியொரு தலைமுறைகளைச் சேர்நத பல கூடித்திரிய அரசர்களையும் கொன்று பழி தீர்த்துக் கொண்டதாக பரசுராமரின் வரலாறு குறிப்பிடுவது பற்றியும் இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. பரசுராமனுடைய படையெடுப்புகளால் பல கூடித்திரியர்கள் கொல்லப்பட்டும் அதனால் நாட்டில் ஒரு கூடித்திரிய நாசம் ஏற்பட்டது. பரசுராம அவதாரத்தையடுத்து இராமாவதாரம் நிகழ்கிறது. இராமன் கூடித்திரிய குலத்தில் பிறக்கிறார். இராமாயணப் பெருங்கதையில் பரசுராமன்-றுநீராமன் சந்திப்பு நிகழ்கிறது. இது ஒரு அரிய அற்புதமான காட்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பரசுராமன் கையில் இருந்த வல்லமைமிக்க விஷ்ணு (நாராயண தனுசு) தனுசு இராமன்கைக்கு மாறுகிறது. அத்துடன் பரசுராமனுடைய தவ வலிமை முழுவதும், ரீராமபிரானிடம் வந்து சேருகிறது. பரசுராமன்-பூரீராமன் சந்திப்பின் மூலம் பிராமணர்களுக்கும் கூடித்திரியர்களும் இடையிலிருந்த பகை அதாவது அறிவாளிகளுக்கும், அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இடையிலான பகை நீங்குகிறது. இரு பிரிவினர்களுக்குமிடையிலான ஒற்றுமை ஏற்படுகிறது. இந்த ஒற்றுமை நாட்டில் நல்லாட்சிக்குக் காரணமாகிறது. பரசுராமன்-கல்யாணராமன் சந்திப்பு ஒருயுக சந்திப்பாகும். அதன் மூலம் பாரதத்தின் ஒற்றுமைக்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. கூடித்திரியர்கள் அரசர்களாகவும் பிராமணர்கள் அமைச்சர்களாகவும் சேர்ந்து செயல்பட்டு நல்லாட்சி அமையக் காரணமாகிறார்கள். இனி உலகிற்குத் துன்பம் இல்லை.