பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மாமுனிவர்களின் சந்திப்பு 34 விஸ்வாமித்திரனுடைய கடுந்தவத்தின் வெம்மை தாங்க முடியாமல் கடைசியில் வசிட்டர் இரங்கி வந்தார். அந்தணரான வசிட்டருக்கும் கூடித்திரியரான விஸ்வாமித்திர மாமுனிவருக்கும் சமரஸம் ஏற்பட்டது. வசிட்டரே முன் வந்து வாராய் பிரம்மரிஷி என்று விஸ்வாமித்திரரை அழைத்துக் கட்டி அணைத்து அவரை பிரம்மரிஷியாக அங்கீகரித்தார். அன்று முதல் விஸ்வாமித்திரர் பிரம்மரிஷியானார். எனவே இதர வல்லமையும் ஆற்றலும் தவ வலிமையும் செயல் திறனும் தகுதி நிலையும் பெற்றவர்களுக்கு பிரம்மரிஷி பட்டம் வழங்குவதற்கு வசிட்ட மகரிஷி தகுதி பெற்றவர். அத்தகைய உயர்வான வசிட்ட மகரிஷி ரகுவம்சத்தின் குலகுருவாக இருந்து அந்த மன்னர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர். தசரதச் சக்கரவர்த்தியின் வேண்டுகோளின்படி அவருக்காகப் புத்திர காமேஷ்டியாகத்தை முன்னின்று நடத்தினார். அதன் பலனாக தசரதனுடைய மூன்று மனைவியருக்கும் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அதில் இராமன் மூத்தவன், இராமன் முதலிய நால்வருக்கும் வசிட்டர் கல்வியும் சகல கலைகளும் சகல வித்தைகளும் கற்பித்தார். அவ்வாறு வசிட்ட மாமுனிவர் மூலம் இராமன் கல்வியும், ஆயுதப் பயிற்சிகளும் வில் வித்தையும் அரசியல் பயிற்சியும், இதர பயிற்சிகளும் பெற்று சிறந்த இராஜ குமாரனாக விளங்கினார். விஸ்வாமித்திரர் இவ்வாறு ரீராமன் வசிட்டருடைய நேரடியான பயிற்சி அளிப்பின் மூலம் சகல கலைகளிலும் வித்தைகளிலும் தேர்ச்சி பெற்று, சகல கல்யாண குணங்களையும் பெற்று இளம் பருவத்தை எய்தினார். அப்போது ஒரு நாள் பிரம்மரிஷியான விஸ்வாமித்திர மாமுனிவர் தசரதனுடைய அரண்மனையை அடைந்தார். தான் நடத்த விருக்கும் ஒரு யாகத்திற்கு அரக்கர்களின் தொல்லைகளிலிருந்து