பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பரசுராமாவதாரம் 42 இழந்து விட்டாய் தெய்வ அம்சம் பெற்ற ஒருவரின் அருள் பெற்ற அரசனைக் கொன்றதால் உனக்கு பிரம்மஹத்தி தோஷத்தைக் காட்டிலும் கொடிய தோஷம் பற்றியிருக்கும். அதற்கு நீ தக்க பரிகாரம் செய்ய வேண்டும். எனவே பூர்மன் நாராயணன்ை எண்ணிப் புண்ணிய கூேடித்திரங்களுக்கு யாத்திரை செய்து புண்ணிய தீர்த்தங்களிலே நீராடி உன் பாவத்தைப் போக்கிக் கொண்டு வா என்று கட்டளையிட்டார். பரசுராமனும் அதை ஏற்றுக் கொண்டு தந்தையை வணங்கி அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு மற்ற தனது சகோதரர்களிடமும் தாயிடமும் மற்ற அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டுத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். தந்தையின் கட்டளையின் படி பரசுராமர், பல புண்ணிய கூேடித்திரங்களுக்கும், யாத்திரைச் சென்று பல புண்ணிய நதிகளிலும் இதர தீர்த்தங்களிலும் நீராடி விட்டு ஓராண்டில் திரும்பி வந்தார். ஒரு நாள் ஜமத்தக்கினி முனிவரின் மனைவி ரேணுகா தேவி வழக்கம் போல் தண்ணிர் கொண்டு வருவதற்காகக் கங்கை ஆற்றிற்குச் சென்றாள். அப்போது கங்கை நீரில் சித்திர ரதன் என்னும் பெயருடைய கந்தருவன் ஒருவன் தேவலோகப் பெண்களுடன் நீராடி விளைாயாடிக் கொண்டிருந்தான். அந்த கந்தருவனுடைய அழகைக் கண்டு மயங்கி ரேணுகா தேவி சஞ்சலமடைந்தாள். நீண்ட நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் அதிகமாகி விட்டது பின்னர் நேரமானதைக் கண்டு திடுக்கிட்டு ரேணுகா தேவி சுய உணர்வு பெற்றுக் குடத்தில் தண்ணிர் எடுத்துக் கொண்டு வேகமாக ஆசிரமத்திற்குத் திரும்பினாள். காலதாமதம் ஆனதைக் கண்டு ஜமதக்கினி தனது ஞான சக்தியால் காரணத்தை அறிந்தார். ரேணுகா தேவி சித்திர ரதனுடைய அழகைக் கண்டு மயங்கி நின்றதை நினைத்துக் கோபமடைந்தார். ஜமதக்கினி முனிவர் தனது பிள்ளைகளை அழைத்துக் கற்பு நெறி தவறிய அவர்களுடைய தாயை தலையை வெட்டிக் கொன்று