பக்கம்:கல்யாணராமனும் பரசுராமனும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&suшпsготиплярий ш7ялпustomі) – ~} +koikалтанай 53 அதை ஆராய்ந்து இடையூறு இன்றே வரும் ஆயினும் அது நன்றாகி விடும் நன்மையாகவே முடியும் என்று கூறினான். பரசுராமன் வருகை அப்போது வல்லமை பொருந்திய மாவீரன் பரசுராமன் வெகு வேகமாக மகா ஆவேசத்துடன் பஞ்ச பூதங்களின் வேகத்தில் உலகின் இறுதிக் காலத்தில் கோபக் கனலுடன் தோற்றமளிக்கும் சிவனைப் போல கோபத்துடன் இராமனுக்கு எதிரே வந்து நின்றான். பரசுராமன் வருகையைப் பற்றி கூறும் போது கம்பன் ‘பாழிப்புயம் உயிர்த்திக்கிடை அடையப்புடை படரச் சூழிச்சடை முடிவிண் தொட அயல்விண் மதி தொத்த ஆழிப்புனல், எரி, கால், நிலம் ஆகாயமும் அழியும் ஊழிக் கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒத்தான்” என்று குறிப்பிடுகிறார். திசைகள் அனைத்தையும் தொடக் கூடிய உயர்ந்த விரிந்த தோள்களையும், விண்ணையும் தொடக்கூடிய சடை முடிகளையும் கொண்ட வல்லமை மிக்க பரசுராமன் கோபக் கனலுடன் வந்த தோற்றம் கடல் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் அழிகின்ற ஊழிக் காலத்தின் இறுதியில் கோபக் கனலுடன் நிற்கும் உமையின் கணவனான சிவனைப் போல இருந்தது என்று பரசுராமன் கோபத்துடன் வந்த காட்சியை சிவனுடைய கோபக் கனலுடன் ஒப்பிட்டுக் கம்பன் எடுத்துக் கூறுகிறார்.