பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


98 யன்பர் - திருமுறைகள் பாடியும் கேட்டும் மகிழ்பவர்- முத் திறத்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடிய திருநெறிய தெய்வத் தமிழைப் பாடுகிருர், ஒரு அன்பர்.

குவப்பெருந் தடக்கை வேடன்...... இத்திருநேரிசையைத் திருக்காளத்தி ஆண்டார் பரவசமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் - திடீரெனக் குதித் தெழுந்தார் - தவப்பெருங் தேவு செய்தார் தவப்பெருந் தேவு செய்தார் என்று பலமுறை கூறினர் - மகிழ்ந்தார்திருக்கோயில் வழிபாடு முடித்துக் கொண்டார்.தன் இல்லம் அடைந்தார். 'மறு. ஆண்டு o இறைவன் திருவருளால் திருக்காளத்தி ஆண்டார்க்கு ஒரு ஆண்மகவு பிறந்தது; ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர் குழுமினர். அவ்வாண் மகவுக்குத் தவப்பெருந் தேவு செய்தார் என்று பெய ரிட்டனர். திருக்காளத்தி ஆண்டார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அக்குழந்தை சிவக்கொழுந் தென வளர்ந்தது. சில ஆண்டுகட்குப்பின் கண்ணப்பரைத் தவப்பெருந் தேவு செய்த பெம் மாளுகிய காளத்தி நாதரைக் கண்டு கும்பிடத் திருக் காளத்திக்குச் சென்ருர், காளத்தி ஆண்டார்; சென்றவர் அங்கேயே தங்கினர் - சிவத்தொண்டு பூண்டு பூணி யாய்ப் பணிசெய்’ என்றவாறு பணிசெய்து வரலாயினுர். 'தவப்பெருந் தேவு செய்தாரும் திருக்காளத்தியில் திருக்கோயில் அலுவல் செய்துவரலார்ை.