பக்கம்:கல்விச் செல்வம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்

35



சிதைபொருள் இன்றி செந்நெறி தழீஇ
உதையத்து இவரும் ஒண்சுடர் போல
எல்லா மாந்தர்க்கும் இருள் அடி விளக்கும்
செல்லாறு இதுவெனச் சொல்லுதல் வேண்டிச்
சாலவை நாப்பண் சலத்தில் தீர்த்த
கேள்வி யாளர்............

இராமாயணம்

பெருந்தடம் கண்பிறை நுதலார்க் கெல்லாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே.

கந்தபுராணம்

மாற்படு புத்தியின் மறுவில் சேதனம்
பாற்படும் உயிர்க்கெலாம் பவத்தின் மாண்பயன்
நூற்படு கல்வியின் நுவல்விளத்தினின்
மேற்படு இன்புதில் விழுவதில் லையே.

திருமைகொள் வளவனேடு தீதில் கல்வியாம்
இருமையின் ஒன்றினை எய்திடாது எனின்
அருமை கொள் அவ்வுயிர் அதனின் ஆற்றவும்
பெருமையுடையது பேயின் தோற்றமே!

விநாயக புராணம்

உடல்வயத் தாகும் சாதி உயர்ந்தவர் சாதி தாழ்ந்தோர்
திடமுற உயிரினோடு செல்லுறும் கல்வி தம்மால்
இடர்தரு பெருமை எய்தார் ஆதலால் அகக்கண் ணாகித்
தொடர்புறும் கல்வி கல்லாத் தொழிலினை விடவே
வேண்டும்.