பக்கம்:கல்விச் செல்வம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

போனால் குறிப்பிட்ட ஒரு சிலர்க்கே என்னும் தனியுரிமையாக இருந்துவந்தது.


உழைப்பவர்க்குப் படிப்பதற்குரிய வாய்ப்பை எட்டாமலே செய்தனர் செல்வரும் மேல் குடியினரும். அதனை உடைத்தெரிந்தது இந்தியவிடுதலை.


கல்வி என்பது கிட்டாத கனவாக எட்டாத கனியாக இருந்தகாலம் மறைந்து, 1947 உரிமைக்குப் பின் அனைவருக்கும் கல்வி கிடைக்க அரசு ஊர்தொறும் பள்ளிகள் திறந்தன.


மக்கள் தம் வாய்மொழியின் எழுத்துகளை தாய்மொழியின் அழகைக் கண்ணாரக் கண்டனர், எழுதுகோலும், தாளும், புத்தகங்களும் அவர்கள் முன் கொண்டுவரப்பட்டன.


படிப்பின்மையைத் துடைத்தெறிய அறிஞர்களின் தொண்டு எண்ணிலடங்கா.


ஆணும் பெண்ணும் சரிநிகராகக் கல்வியைக் கற்க நாட்டின் தலைவர்கள் திட்டம் தீட்டினர்.


கடந்த முப்பது ஆண்டுகளில் பல்வேறு கால கூட்டங்களில் அறியாமை நோய் ஐம்பது விழுக்காடு துடைத்தெறியப்பட்டது.


முன்பு ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டவர்கள் அனைவரும் கல்வியின் ஒளியைப் பெற்றனர்.