பக்கம்:கல்வி உளவியல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 139 இதுகாறும் அறிந்தவற்றிலிருந்து ஒரே குடும்பத்திலுள்ள பல குழந்: தைகள் வெவ்வேறுவிதமாக இருப்பதற்கும் ஓரினத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் விந்தையான தனியாளாய்த் திகழ்வதற்கும் ஒருவாறு கார ணம் தெரியும். தனியாள் வேற்றுமை*’ என்பது தற்கால உளவியலிலும் கல்வி இயலிலும் ஒரு சாதாரண செய்தி , அந்த உண்மையிலிருந்து சூழ் கிலை மாற்றத்தாலோ அன்றி கல்வி முறையினலோ அல்லது தக்க பயிற்சியினலோ எல்லாக் குழந்தைகளையும் ஒரே குறிப்பிட்ட கிலே அளவுக்குக் கொண்டுசெலுத்த முடியாது என்பதை அறிகின்ருேம். ஆளுல், கல்வி முறை ஒவ்வொரு குழந்தையின் திறமைக் கேற்றவாறு: அமைய வேண்டும்; சிறந்த முறையிலும் வாய்ப்புக்கள் நல்க வேண்டும். குழந்தையின் சிறந்த துலக்கம் ஆசிரியரும் பெற்ருேரும் திட்டப்படுத்தி வைத்திருக்கும் குறிக்கோள் நிலையை அடைவதில் அன்று ; தான் குடிவழியாகப் பெற்ற மூலதனத்திற்கேற்ப சிறந்ததொரு கிலையை. எய்த வேண்டும் என்பதுதான். சூழ்நிலையின் இயல்பு சூழ்நிலையைப்பற்றிய சில கருத்துக்களை மேலே கூறிளுேம். ஈண்டு மேலும் சிலவற்றைக் காண்போம். குழந்தை வளர்ச்சியில் சூழ் கிலை பல்வேறு வழிகளில் தனது செல்வாக்கைச் செலுத்துகின்றது. வளர்ச்சிச் செயல்கள் யாவும் உயிரியம்49, நீர், உணவு, சாதகமான தட்ப வெப்ப நிலைகள் முதலியவை தேவையான அளவு கிடைப்பதைப் பொறுத் திருக்கின்றன. ஒருவருடைய பழக்கங்களும் திறன்களும்" அவர் சூழ் நிலையிலிருந்து பெறும் பயிற்சியைத் தரக்கூடிய நிலைமைகளைப் பொறுத் திருக்கின்றன. தனியாளின் அறிவு அவர் பெற்ற பயிற்றலின்* அளவையும் அவருடைய சமூகப் மனப்பான்மைகளையும் அவர் பங்கு கொண்ட சமூக நிகழ்ச்சிகளையும் பொறுத்தவை, பொருள்கள் தூண்டல்களை விளைவித்தால்தான் அவை சூழ்நிலை யாகும் என்று மேலே கூறிளுேம் அல்லவா ? அதை மேலும் விளக்கு. வோம். பச்சைப்பட்டு விரித்தாலொத்த பச்சைப்பசேலெனத் தோன்றும் பரந்த பசும்புல்வெளி பசியோடு துடிக்கும் நாய்க்கு வறட்சியான சூழ்நிலை யாகும். அங்ங்னமே, குழிமுயல்கள் கிறைந்து கிடக்கும் புலம் பசுவிற்கு ஏலாத சூழ்நிலையாகும். தனியாளின் உடல்தேவை அல்லது உள்ளக். கவர்ச்சிக்கு முறையீடு செய்யும்பொழுதுதான் சூழ்நிலை பயனுடையதா 4ssouri Gajgsolo - individual difference. 4 92-ustifluứd- oxygensso opir-skill. #1 uðjpé - teaching.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/162&oldid=777841" இலிருந்து மீள்விக்கப்பட்டது