பக்கம்:கல்வி உளவியல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கு நிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும் 167 வற்றை மாளுக்கர்களிடம் வளர்க்கின்றன. அவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி வெற்றியையும் கல்குகின்றன. கற்றலில் பரிசில்கள் தரும் பயனை எவரும் மறுக்க முடியாது என்பது உண்மையே. ஆனால், அவற்றை எவ்வாறு தகுதியாகப் பயன்படுத்தலாம் என்பதுதான் பிரச்சினை. ஒரு கிலையில் ஒரு பரிசிலைப் பயன்படுத்துதலால் நாம் விரும்பும் பயனேயன்றி வேறுபலன்களும் ஏற்படுகின்றன. இதை ஆசிரியர் ஊன்றி ஆராய்தல் வேண்டும். ஆசிரியர் திட்டமிட்டு அமைத்த பலன் கற்றல் செயலோடு புறத்தொடர்பையே கொண்டது. அது மாணுக் கன் செயலை விலைகொடுத்து வாங்குவது போலாகும். எடுத்துக்காட்டு ஒன்ருல் இதனை விளக்குவோம். எட்டாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பள்ளி நூலகத்திலுள்ள ஒரு புத்தகத்தைச் சுட்டி அதனை ஒருவாரத் திற்குள் படித்து முடித்தவர்களுக்கு பரிசில் ஒன்று தருவதாகப் பகர்கின்ருர். அவ்வகுப்பு மாளுக்கர்கள் பலர் அப்பரிசிலைப் பெற முயல் கின்றனர். அப்புத்தகத்தைப் படித்தும் முடிக்கின்றனர். இத்திட் டம் சிலரிடம் சரியான நோக்கத்தைப் பெறச் செய்கின்றது ; சிலரிடம் அங்ங்ணம் பெறச் செய்வதில்லை என்பதை நாம் கவ னிக்க வேண்டும். அறிவுத்திறன், படிப்பில் உண்மையான ஆர்வம் ஆகியவற்றை எழுப்புதலே ஆசிரியரின் நோக்கம். சிலரிடம்தான் இவை அமைகின்றன ; இவர்கள் மேலும் மேலும் நூலகத்திலுள்ள பல புத்தகங்களை எடுத்துப் படிப்பர். இவர்கள் பரிசில் கொடுத்தால்தான் படிப்பர் என்பதில்லை. ஆனல், சிலர் பரிசிலை விரும்பிப் படிப்பர் ; இவர் களிடம் உண்மையான அறிவாற்றல் இல்லை. பரிசிலை நிறுத்திவிட்டால் இவர்கள் படிப்பதையும் நிறுத்தி விடுவீர். பரிசிலில் பற்றுவைத்து சிலர் பொய் சொல்லலாம் ; ஏமாற்றும் செயலில் இறங்கலாம். மேலும், பரிசில் வழங்குதல் பரிசில் பெருதவர்களிடம் பொருமை போன்ற தீய எண்ணங் களையும் எழுப்புதல் கூடும். பரிசில் பெற்றேன் மீண்டும் ஊக்கம் பெற லாம். ஆனல், பெருதவர்கள் அடையும் ஏமாற்றத்திற்கு ஒருவனுடைய வெற்றியே ஈடாகாது. இக் குறையை நீக்கும்பொருட்டு இக்காலத்தில் குழுப் பரிசில்கள்’ மேற்கொள்ளப் பெறுகின்றன. இத் திட்டத்தில் தனிப்பட்ட மாளுக் கனுக்குப் பரிசில் வழங்கப்பெறுவதில்லை. எல்லோரும் ஒரே அளவு பாராட்டோ, ஒரே அளவு மதிப்பெண்ணுே பெற்ருல், அவற்றின் பலன் மதிப்பு மறைகின்றது. குழுவிற்கு நல்கும் பரிசில் ஒத்துழைப்பை வேண்டுகிறது; மக்களாட்சி நிலவும் இக்காலத்தில் இது அதிகமாக வேண்டப்படுவதாகும். குழு வேலையில் ஏமாற்றம், பொய், சொந்த ஆக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/189&oldid=777900" இலிருந்து மீள்விக்கப்பட்டது