பக்கம்:கல்வி உளவியல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 203 இரண்டாவது-பயிற்சி விதி' இவ்விதி பயிற்சியின் இன்றி யமையாமையை வற்புறுத்துகின்றது. ஒரு தூண்டலுக்கும் துலங்கலுக் கும் உள்ள இணைப்பு பயிற்சியால் வலியுறுகின்றது; நீண்டகாலம் பயிற்சி யிராவிடில் அவ் விணைப்பு வன்மையற்றுப்போகின்றது” என்பது விதி. பயன் விதி பயிற்சி விதியில் முடிகின்றது. ஒரு செய்யுளை மனப்பாடம் செய்யவும், ஓர் இராகத்தை நன்ருகப் பாடவும், மிதிவண்டியிலேறிப் பாங்காகச் செல்லவும், அவற்றைப் பல முறை பயிலவேண்டும். எழுத்துத் திருத்தம் பெறுவதற்கும் பயிற்சி வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் காப்பழக்கம்’ என்பது பழமொழியன் ருே ? வாய்ப்பாடு சம்பந்தமான சிறு கணக்குகளைப் பலமுறை போடுவதால் சிறுவன் வாய்ப்பாட்டைக் கற்கின்றன் . நாடகத் தில் நடிக்கும் சிறுவர்கள் பாத்திரங்களுக்கிடையே நடைபெறும் உரை யாடல்களைப் பலமுறை படித்து ஒத்திகையின்பொழுது திரும்பத்திரும்பக் கூறிப் பயிற்சி பெறுகின்றனர். வீணையில் பயிற்சி பெறுவோர் அதனே மீண்டும் மீண்டும் பன்முறை மிழற்றிக் கற்கின்றனர். காட்டியம் ஆடு வோரும் பலமுறையில் தப்படிகளைப் போட்டுப்போட்டுத்தான் கற்கின்றனர். பயிற்சியின்மையால் பலவற்றை மறக்கின்றுேம். அடிக்கடிப் பயன் படுத்தும் வாய்ப்புக்களின்மையால் பல செய்திகள் மறந்து போகின்றன. தொல்காப்பியம் போன்ற இலக்கணங்களையெல்லாம் கன்கு கற்று முதல் வகுப்பில் தேறிய புலவர், தாம் பணியாற்றும் இடத்தின் காரணமாக அவற்றை அடிக்கடிக் கையாளும் வாய்ப்புக்களின்மையால் அவற்றை மறக்கின் ருர். அவற்றைச் சரியாகப் படியாமல் தேர்ச்சியுற்ற வேருெரு புலவர், புலவர் வகுப்புக்குக் கற்பிக்கும் வாய்ப்புக்களினுல் அவற்றை கினேவிலே வைத்துக் கொள்கின்ருர், அறிவியல் விதிகள் வாய்ப்பாடுகள் ஆகியவற்றின் நுட்பங்களையும் தெளிவாகக் கற்ற ஒரு பட்டதாரி அரசினர் அலுவலகங்களில் பணியாற்றும் காரணமாக அனைத்தையும் மறந்து விடுகின்றர். இவை நடைமுறையில் நாம் காணும் உண்மைகள். இவ்விடத்தில் இன்னென்று நினைவுகூர்தற்பாலது. பயிற்சி மட்டி லும் நிறைவினைத் தராது. தகுந்த இயக்கங்களைத் தெரிந்தெடுத்து வலியு றுத்தியும், தகாத இயக்கங்களைத் தடுத்தும் செய்யும் பயிற்சியே தேர்ச்சி யைத் தரும். எடுத்துக்காட்டாக மிதிவண்டி ஏறிப்பழகுதல், கையெ ழுத்து, தட்டச்சுப்பொறியினே இயக்குதல் போன்றவற்றில் தொடக்கத் தில் கைவரப்பெருத எளிமை, திருத்தம், பொருத்தம் முதலியவை பயிற்சியின் பயனுக நாளடைவில் ஏற்படுகின்றன. 17 Lúñés, soft - Law of Exercise.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/225&oldid=777983" இலிருந்து மீள்விக்கப்பட்டது