பக்கம்:கல்வி உளவியல்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 209 புதிர் தீர்த்தல்' என்ற வடிவங்களில் பரிணமிக்கின்றன. எல்லாத் தேவைகளிலும் செயலைப்போல் நேரடியாகக் கற்றலில் ஊக்குநிலையாகப் பயன்படுத்தும் தேவை யொன்றும் இல்லையென்றே சொல்லிவிடலாம். பழையமுறைக் கல்வியில் இத்தேவை நிறைவேற்றப்பெறுவதே இல்லை ; நிறைவேற்றப்பட வாய்ப்பும் இல்லை. அதில் ஆசிரியருக்கும் பாடப் புத்தகத்திற்கும் முக்கியத்துவம் கிடைத்திருந்தது. மானுக்கர்கள் செயலற்று வாளா இருக்கவேண்டிய நிலைதான் கிலவிற்று. ஆகவே, மாளுக்கர்களிடம் ஈர்ப்புக்கள்: உண்டாகின்றன. இந்த ஈர்ப்புகளுக்கும் போக்கிடம் இல்லாததால் அவை பகற்களு, கோட்டிலோ புத்தகத்திலோ ஓவியம் தீட்டல், குறிப்புக்கள் எழுதிப் பரப்புதல் போன்ற செயல்களாகப் பரிணமிக்கின்றன. வகுப்பு முடிந்ததும் மாளுக்கர் வெளி வருங்கால் ஓட்டத்துடனும் உரத்த குரலுடனும் இவ் வீர்ப்புக்கள் வெளிப்படுவதைக் காணலாம். ஒரு குறுகிய காலத்திற்குள் வெளிப்படும் ஆற்றல் மிகப் பெரிய அளவினது ஆளுல், கற்றல் செயல்கள் தேவைகளுக்கேற்றவாறு தொடர்புகொண்டிருப்பின் இந்த ஆற்றலின் பெரும் பகுதியை வகுப்பறை களில் ஆக்க முறைகளில் திருப்பிவிடலாம். புதியமுறைக் கல்வியில் குழந்தைக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகட்கும் முக்கியத்துவம் கிடைத்திருக்கின்றது. செய்கைத் திட்டமும் செயல் முறையும் வற்புறுத்தப்பெறுகின்றன. அது உளவியல் அடிப்படையாகக் கொண்டது. கவர்ச்சி, கோக்கமுடைமை, வாழ்க்கைத் தொடர்பு போன்றவற்றைப் புதியமுறைக் கல்வி வற்புறுத்துகின்றது. செயல் முறைப்பள்ளியில் மாளுக்கர்கள் பொருள்களே ஏட்டுப்பாட மாகப் பயில்வதில்லை ; அங்கு பொருள்களைக் கையாளுவதாலும், இயற்று தலாலும் நேரான அனுபவத்தைப் பெறுகின்றனர். பள்ளி, குழவிகள் கூடித் தங்கள் செயல்களைத் திட்டமிட்டு அவற்றை இயற்றும் இடமாகத் திகழ்கின்றது. அங்கு அவர்கள் இயற்கையாகச் செயலாற்றுவதற்கும், அச்செயல்களின் பலனைக் காண்பதற்கும் அதிக வாய்ப்புக்கள் அளிக்கப் பெறுகின்றன. சுருங்கக்கூறின், பள்ளி ஒர் ஆய்வுக்கூடமாகின்றது. குழந்தைகள் அங்குப் பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்; ஒவ்வொரு வரும் தத்தம் திறனுக்கேற்றவாறு தம் பங்குக்குரிய செயல்களைப் புரிகின் றனர். அங்கு ஆசிரியர் ஒரு சர்வாதிகாரி அல்லர் ; குழவிகளுடன் ஒத்துழைத்து, தேவைப்படுங்கால் அவர்கட்கு வழிகாட்டி, அவர்கள் முயற்சியைத் தக்க முறையில் பயன்படுத்துமாறு தூண்டுவிக்கும் ஒரு முதியோராவர். இம்முறையில் கற்கும் குழவிகளிடம் ஏட்டுச் சுரைக்

    • Háliráirážá) - problem-solving. **Rírâu - tension. க.உ.14
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/231&oldid=777997" இலிருந்து மீள்விக்கப்பட்டது